கன்னத்தில் அறைவாங்குவதற்கு முன்னர்
அந்த நாயை கட்டிப்போடுங்கள்
-ஞானசாரதேரர் ரணிலிடம் கோரிக்கை
பௌத்த
பிக்குகளுக்கு பாரிய இழிவை ஏற்படுத்திய நிலையில்
தயவுசெய்து எம்மிடம் கன்னத்தில் அறைவாங்குவதற்கு முன்னர்
அந்த நாயைக்
கட்டிப் போடுங்கள்
என பிரதமர்
ரணில் விக்ரமசிங்கவிடம்
கேட்டுக் கொள்வதாக
பொதுபல சேனா
அமைப்பின் பொதுச்
செயலாளர் கலகொட
அத்தே ஞானசார
தேரர் தெரிவித்துள்ளார்.
வெயாங்கொட,
வடத்கல, கனேகந்த
விகாரையில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில்
கலந்துகொண்டு உரையாற்றுகையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.
அங்கு
அவர் தொடர்ந்து
தெரிவிக்கையில்
இந்த
நாட்டில் 2500 வருடங்கள் மதப் போதனை செய்து
வருகின்ற பௌத்த
பிக்குகளுக்கு செய்ய முடியுமான உயர்ந்த பட்ச
இழிவை ஐக்கிய
தேசியக் கட்சியிலுள்ள
இராஜாங்க அமைச்சர்
ஒருவர் செய்துள்ளார்
எனவும் தேரர்
குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது
நாட்டில் கூக்குரல்
இட்டுத் திரியும்
90 இற்கும் அதிகமான பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு
உட்பட்டவர்கள் எனவும் அதனால் மன அழுத்தங்களுக்கு
உட்பட்டதனாலேயே இவ்வாறு தேரர்கள் குரோதத்துடன் காணப்படுவதாகவும்
சமூக வலைத்தளத்தில்
இராஜாங்க அமைச்சர்
ரஞ்சன் ராமநாயக்க
அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இது
குறித்து கருத்துத்
தெரிவிக்கையிலேயே ஞானசார தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment