500 மில்லியன் கையகப்படுத்தல்
காமினி செனரத் மற்றும் பிரதிவாதிகள்
இருவர் விடுதலை
ஜனாதிபதி
செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத்
மற்றும் பிரதிவாதிகள்
இருவர் சகல
குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்ய நிரந்தர
நீதாய நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
சம்பத்
அபேகோன், சம்பத்
விஜேரத்ன மற்றம்
சம்பா ஜனாகி
ராஜரத்ன ஆகிய
மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளுக்கு
எதிராக முன்வைக்கப்பட்ட
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சரியான
முறையில் சாட்சிகள்
இல்லாத காரணம்
இல்லை என
நிரந்தர நீதாய
நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி சம்பத் அபேகோன்
தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில்
பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கபடும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்கு விசாரணை மேற்கொள்ள
முடியாது என்பதனால்
அவர்களை விடுதலை
செய்வதாக நீதிபதி
தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கடந்த
2014 ஆம் ஆண்டு
பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம்
ஆண்டு ஜனவரி
27 ஆம் திகதி
வரையான காலத்தில்
லிட்ரோ கேஸ்
நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை
முறைகேடாக பயன்படுத்தியதால்
பொதுச் சொத்துக்கள்
சட்டம் மற்றும்
குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக
சட்டமா அதிபரினால்
குறித்த வழக்கு
தாக்கல் செய்யப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.