மர்ஹும் .ஆர். மன்சூரின்
அபிவிருத்தி, சேவைகள் குறித்து
பாராளுமன்றத்தில் ஹரீஸ் எம்.பி



தமிழ், முஸ்லிம் மக்களை சமமாக நடத்திய .ஆர்.. மன்சூர் பிறந்த கல்முனை மண்ணில், பிரிவினையை ஏற்படுத்துவது கவலைக்குரியதாகும். மன்சூருக்கு மரியாதை செலுத்துவதாக இருந்தால் கல்முனை விடயத்தில் விட்டுக் கொடுப்புடன் நடந்து முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து வாழ தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வர வேண்டுமென .தே. பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

கிழக்கு அரசியலின் மூன்று படிகளில் 1977ற்கு முன்னரான கட்டத்தில் தமிழ் தேசியத்துடன் இணைந்து, தமிழ் விடுதலை கூட்டணி சார்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகும் நிலைமை காணப்பட்டது.1977இன் பின்னர் பெரும்பான்மை தேசிய கட்சிகளில் போட்டியிட்டு தெரிவாகும் நிலைமை காணப்பட்டது.

அடுத்து முஸ்லிம் கட்சிகளினூடாக பாராளுமன்றம் தெரிவாகும் நிலைமை உருவானது.

தமது கட்சியில் போட்டியிடுமாறு தந்தை செல்வா கோரியபோது, அதனை நிராகரித்த மன்சூர் .தே.கவில் போட்டியிட்டார். தேசிய நாடு தொடர்பில் அவருக்கென ஒரு பார்வையிருந்ததால், அவர் இந்தக்கோரிக்கையை ஏற்கவில்லை. .தேக.வில் போட்டியிட்ட அவர் சில நூறு வாக்குகளால் தோற்றார்.அவர் தந்தை செல்வாவின் கோரிக்கையை ஏற்று போட்டியிட்டி ருந்தால், தமிழ் வாக்குகளையும் பெற்று வென்றிருப்பார்.

1977இல் நடந்த பொதுத் தேர்தலில் அவர் கல்முனை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கல்முனை அபிவிருத்தியில் பெரும் புரட்சி செய்த அவர், தமிழ் முஸ்லிம் ஐக்கியத்திற்கும் வித்திட்டார்.

தமிழ் முஸ்லிம் பகுதிகளை அவர் சமமாக அபிவிருத்தி செய்தார். தமிழ் எம்.பிக்களை விட அதிகமாக தமிழ் பிரதேச அபிவிருத்திக்கு அவர் பங்காற்றியிருந்தார்.

ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்களும் வழ ங்கப்பட்டது. இன ஐக்கியத்திற்கு அவர் ஆற்றியசேவை முக்கியமானது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃபின் காலத்தில் முஸ்லிம் விடுதலை போராட்டத்திலும் அவர் ஒன்றாக பயணிக்க முன்வந்தார். தலைவர் அஷ்ரஃபின் கொள்கையுடன் முஸ்லிம் சமூகம் பயணிக்க வேண்டும் என்பதற்காக அவர் அஷ்ரஃபுடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொண்டார். அவரின் முடிவு முஸ்லிம் சமூகத்திற்கு பலமாக அமைந்தது.

2001இல் நான் கல்முனை தொகுதியில் போட்டியிட்ட போது எனக்கு அவர் தந்தை போன்று வழிகாட்டினார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும்சேவையாற்றியுள்ள அவர், வர்த்தக வாணிப அமைச்சராக நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு பெரும் சேவையாற்றினார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளின் போது தமது மக்களை போன்று அவர் நடந்து கொண்டார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தமிழ் பகுதி முஸ்லிம் பகுதி என பிரிய வேண்டும் என கோருவது கவலையளிக்கிறது.வேறு பகுதிகளில் இவர்கள் இவ்வாறு நடந்திருந்தால் பொறுத்திருக்கலாம்.

மன்சூர் பிறந்த மண்ணில் இவ்வாறு பிரிவினையை ஏற்படுத்துவது கவலைக்குரியதாகும். மன்சூருக்கு மரியாதை செலுத்துவதாக இருந்தால் கல்முனை விடயத்தில் விட்டுக் கொடுப்புடன் நடந்து முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து வாழ முன்வருமாறு கோருகிறோம் என்றார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top