புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட
1858 அதிபர்களுக்கு உள்ளக பயிற்சி ஆரம்பம்



புதிதாக கல்வி அமைச்சினால் இணைத்துக் கொள்ளப்பட்ட 1858 அதிபர்களுக்கு நேற்று முதல் மகரம கல்வியற் கல்லூரியில் உள்ளக பயிற்சி ஆரம்பமானது.

இது தொடர்பான நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிவசம் உரையாற்றினார். கல்வித் துறையில் உயர்தர வகுப்பு மாணவர்கள் டெப் கணனியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போழுது வசதி செய்யப்பட்டுள்ளது.

இது இலவச கல்வியில் ஏற்பட்ட பாரிய புரட்சியாகும். இந்த புரட்சி விளையாட்டிற்குரிய விடயம் அல்ல. சர்வதேசத்துடன் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப கல்வி துறையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் தொரிவித்தார்.

பாடசாலை கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக தகைமைகளுடன் கூடிய விசேட தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ திறமைகளுடனான அதிபர்களின் உதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கல்விஅமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் வகுப்புக்காக புதிதாக அதிபர்கள் 1858 பேரை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி குறித்த அதிபர்களுக்கான ஆரம்ப சேவைக்கான பயிற்சி ஒக்டோபர் 02 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
                                                     
2019-10-02 முதல் 2019-11-13 திகதி வரை நடத்தப்படவுள்ள குறித்த பயிற்சியானது, நான்கு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதன்பிரகாரம் முதற்கட்டத்தின் கீழ் அதிபர் பயிற்சிக்காக பதிவி செய்யும் நடவடிக்கைகள் மஹரகம தேசிய கல்வியியற் கல்லூரி மற்றும் மஹரகம மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

புதிய அதிபர்களுக்கு வலய கல்வி காரியாலத்தினுள் ஒரு நாள் பயிற்சி வழங்கப்படவுள்ளதுடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் மாகாண பிரதிநிதிகளின் தொடர்பாடலின் ஊடாக பாடசாலைகளுக்கு இணைத்துக்கொண்டு இரு வார பயிற்சி வழங்குவதற்கும், மூன்றாம் கட்டமாக மாகாண பயிற்சி மத்திய நிலையத்தில் இரு வார வதிவிட பயிற்சி வழங்குவதற்கும்,நான்காம் கட்டமாக வேலை செய்யும் 7நாட்களுக்கு பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் சிறார்களின் கல்வி உரிமையை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் தீர்மானங்களை எந்தகாரணத்திற்காகவும் தாமதம் செய்யாது உடன் அமுலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அதற்காகவே புதிய அதிபர்களை உடன் பாடசாலை கட்டமைப்புக்கு இணைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக கல்வி அமைச்சர், அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதன்படி புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 1858 அதிபர்களுடன் 2015 முதல் இதுவரை 5759 அதிபர்கள் பாடசாலை கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top