ராஜகிரியவிற்கு அருகாமையில் உள்ள
பாடசாலைகள் சில 7 ஆம் திகதி மூடப்படும்
ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுக்கள் பொறுப்பேற்கும் தினமான திங்கள் கிழமை (7 ஆம் திகதி) கொழும்பு கல்வி வலயத்தின் 3 தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகள் மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கல்வி வலயத்திற்குட்பட்ட 3 பாடசாலைகளும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பு மனு பொறுப்பேற்க்கப்படும் தினத்தன்று பாதுகாப்பை கருத்தில் கொண்டு அன்றைய தினம் காலை 7.00 மணி தொடக்கம் நண்பகல் 1.00 மணி வரையில் ராஜகிரிய சரண மாவத்த உள்ளிட்ட வீதிகள் சில மூடப்பட்டிருக்கும்.
தேர்தல் செயலகத்திற்கு அரசியல் கட்சி வேட்பாளர்களுடன் வரும் கட்சி செயற்பாட்டாளர்களின் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு ராஜகிரிய சந்தி மற்றும் அதனை அடுத்துள்ள பிரதேசங்கள் ஒதுக்கப்படவுள்ளது. இந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளை அன்றைய தினம் மூடுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு அமைவாக கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பொரளை, கொழும்பு மற்றும் கொழும்பு மத்தி ஆகிய தொகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வலயத்தில் ராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயம், ராஜகிரிய ஏவா வித்தாரண வித்தியாலயம் மற்றும் ராஜகிரிய ஏவா வித்தாரண மத்திய கனிஸ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை அன்றைய தினம் மூடுவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர், மேல் மாகாண கல்வி அமைச்சின செயலாளரிற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
0 comments:
Post a Comment