கோத்தாவுக்கு சிங்கள மக்கள்
ஒன்றுபட்டு வாக்களிக்க
முடிவெடுத்து விட்டார்கள்
அந்த வெற்றியில் நாம் பங்காளராவோம்
எல்லோரும் மொட்டுவை ஆதரிப்போம்
முன்னாள் பிரதியமைச்சர் மையோன் முஸ்தபா அழைப்பு.
கோத்தாவுக்கு சிங்கள மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்க முடிவெடுத்து விட்டார்கள் அந்த வெற்றியில் நாம் பங்காளராவோம். இனநல்லுறவை கட்டியெழுப்பி செழிப்பான பொருளாதார வளம் மிக்க நாட்டை உருவாக்க சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும். எனவே,. எல்லோரும் மொட்டுவை ஆதரிப்போம் என முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் எம்.எம்.எம். (மையோன்) முஸ்தபா தெரிவித்தார்.
கல்முனையில் நேற்று மாலை இடம்பெற்ற சமகால அரசியல் மற்றும் தனது நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள்
உயர்கல்வி பிரதி அமைச்சர் எம்.எம்.எம். (மையோன்) முஸ்தபா இங்கு தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,
1999 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளராக இருந்த நான் இன்று முதல் எமது மக்களின் நலன் கருதி எனது அரசியல் பாதையை மாற்ற தயாராகியுள்ளேன்.
பிரதி அமைச்சராக பதவி வகித்த எனக்கு எமது நாட்டில் தலைதூக்கியுள்ள வெறுப்பு மனப்பான்மையை களைய வேண்டிய பொறுப்பு இருக்கிறது. பொருளாதாரம் இன்று சீரழிந்து எமது இலங்கை நாடு அதள பாதாளத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது. இவற்றை சீர் செய்ய வேண்டும் என்பதால் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.
கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஸ அரசில் எல்லா சுகபோகங்களையும் முஸ்லிம் தலைமைகள் அனுபவித்து விட்டு இறுதி நேரத்தில் கட்சி மாறியது அது வரலாற்றில் அழிக்க முடியாத சம்பவங்களில் ஒன்று.
மர்ஹும் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ஒருவர் இந்த சமூகத்துக்கு செய்தது ஒன்றுமில்லை. ரிசாத்தை சரியாக கௌரவித்து சகல உதவிகளையும் செய்து அவரை அபிவிருத்தி திட்டங்களின் நாயகனாக மாற்றிய அந்த ஆட்சி இறுதியில் துரோகிகளாக இவர்களை அடையாளப்படுத்தியது.
எனவே, இன நல்லுறவை கட்டியெழுப்பி செழிப்பான பொருளாதார வளம் மிக்க நாட்டை உருவாக்க கோத்தாவை ஆதரிப்போம் என்பதே எனது அழைப்பாகும்.
கல்முனையில் குறிப்பாக
அம்பாறையில் என்னால் செய்யப்பட்ட சேவைகளை தவிர இதுவரை குறிப்பிட்டுச்
சொல்லக்கூடிய சேவைகள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
என்னால் கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க சேவைகளை செய்ய முடிந்தது மஹிந்த ராஜபக்ஸ அரசின் ஆட்சியிலேயாகும் என்பதை எம்மால் மறக்க
முடியாது. அதனாளையே அவரோடு இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளேன்.
கோட்டாவுக்கு சிங்கள மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்க முடிவெடுத்து விட்டார்கள் அந்த வெற்றியில் நாம் பங்காளராவோம். இனநல்லுறவை கட்டியெழுப்பி செழிப்பான பொருளாதார வளம் மிக்க நாட்டை உருவாக்க சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும் என முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் எம்.எம்.எம். (மையோன்) முஸ்தபா தெரிவித்தார்.




0 comments:
Post a Comment