வடக்கு மாகாண சபை முதலமைச்சர்
விக்னேஸ்வரன் வெளிநாடு செல்வதாயின்
ஆளுநரிடம்
அனுமதி பெறல்வேண்டும் எனத் தகவல்
வடக்கு
மாகாண சபையின்
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய
பிரதமர் நரேந்திர
மோடியை சந்திப்பதற்கு
வெளிநாடு செல்வதாயின் மாகாண ஆளுநரிடம்
(ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுபவர்) முன் அனுமதி
பெற வேண்டும்
என தெரிவிக்கப்பட்டிருப்பதாக
அறிவிக்கப்படுகின்றது.
இலங்கையில்
உள்ள தமிழ்
தேசிய கூட்டமைப்பின்
(டிஎன்ஏ) தலைவர்கள்
கடந்த மாதம்
இந்தியாவுக்கு சென்றிருந்தனர் . அப்போது, மோடி உள்ளிட்ட
முக்கிய தலைவர்களை
அவர்கள் சந்தித்துப்
பேசினர். இந்நிலையில்,
வடக்கு மாகாண
சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மோடியை
சந்தித்து பேச
முடிவு செய்துள்ளார்
எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியப்
பிரதமர் நரேந்திர
மோடியுடன் பேச்சு
வார்த்தை நடத்த
தயார் என்றும்
வடக்கு மாகாண
சபை மற்றும்
தற்போதைய அரசியல்
சூழ்நிலை குறித்து
பேச்சு வார்த்தை
நடத்த விரும்புவதாக
விக்னேஸ்வரனும் தெரிவித்திருந்தார்.
இந்திய
பிரதமரின் முறைப்படியான
அழைப்பு கிடைத்தவுடன்
தாம் உடனடியாக
இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள ஆயத்தமாக இருப்பதாகவும்
விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்திருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment