முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்திற்கென

நிரந்தர சட்டம் இலங்கையில் இயற்றப்படல் வேண்டும்..!!

(துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்)

Muslim women's dress codes have been enacted by the Government of Sri Lanka கலாச்சாரத்திற்கென a permanent law only to prevent the problems that can arise in the future in any way other than a permanent solution methods amaiyume .. This is not exactly 
In the case of our Muslim politicians will care? Of our ancestors earned will struggle in order to secure the rights and all of our politicians are perruttarap Where?




"கண்டவனுக்கல்ல கொண்டவனுக்கே எங்கள் உடம்பு"என்ற அடிப்படையில் எமது முஸ்லிம் பெண்கள் அணியும் கண்ணியமிக்க ஆடைக்கலாச்சாரத்திற்கு நாளுக்கு நாள் தடைகள் வலுத்துக்கொண்டே வருவது வேதனைக்குரிய ஓர் விடயமாகும்.
இவ்வளவு நாளும் பேரின மக்களிடம் இருந்து இத் தடைகள் வந்த போதிலும் "யாழ்ப்பான மருத்துவ பீடத்தில் முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரமான நிகாப் இற்கு தடை விதிக்கப்பட்டதனூடாக"பேரின மக்களுடன் கைகோர்க்கும் வண்ணம் பேரின மக்களையும் தாண்டி எமது பெண்களின் ஆடைக்கலாச்சாரத்திற்கான தடைகள் இலங்கையில் சென்று கொண்டிருப்பதையே பறை சாட்டி நிற்கிறது.
 40 மாணவர்கள் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருக்கும் போதும் ஒரே ஒரு மாணவியே நிகாப் அணிகின்ற விடயமானது எமது முஸ்லிம் சமூகத்தின் மூளைக்குள் இட்டு அலச வேண்டிய ஒரு விடயமாக இருப்பினும் பல்கலைக்கழக வளாக உள் நுழைவு,பரீட்சைகளின் போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டி இருப்பதாலும்,பரீட்சையின் போது ஆள் அடையாளப்படுத்தும் முறைமை மாணவிகளுக்கு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தலாம் போன்ற நொண்டிக் காரணிகளால் நிகாப் இற்கு தடை விதிக்கப்பட்டதை ஏற்கமுடியாது.
ஒரு உண்மையான முஸ்லிம் பெண் கல்வியை விட இஸ்லாத்திற்கே முன்னுரிமை வழங்குவார் என்பதை முதற்கண் இவ்விடத்தில் யாழ்ப்பான பல்கலைக்கழக மருத்துவ பீட சபைக்கு நினைவூட்டுவதோடு அக் குறித்த ஒரு  மாணவி நிகாப் தடை தொடர்பாக உங்கள் சபைக்கு எதற்கு கடிதம் அனுப்பினார் என்பதையும் நன்கு சிந்திக்குமாறு உங்களிடம் வினயமாய் கேட்டுக்கொள்கிறேன்.  .

அம் மாணவிற்கு பரீட்சையின் போது ஆள் அடையாளப்படுத்திய முறைமை உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பின் நிகாப்பை கழற்றி தூக்கி எறிந்திருக்க வேண்டுமல்லவா??ஏன்  மருத்துவ பீட சபைக்கு சபைக்கு கடிதம் எழுதினார்??
ஒரு உண்மையான முஸ்லிம் பெண்ணிற்கு ஆள் உறுதிப்படுத்தும் முறைமை ஏற்படுத்தும் உளவியல் பாதிப்பை விட  பல மடங்கு உளவியல் தாக்கம் அப் பெண் நிகாப் போன்ற இஸ்லாமிய வழி முறைகளை  துறக்கும் போதே என்பதை  மீண்டும் ஒரு முறை மருத்துவ பீட சபைக்கு நியாபகப் படுத்திக் கொள்கிறேன்.
மேலும்,எத்தனையோ?முஸ்லிம் சகோதரிகள் இவ்வாறான ஆடைக் கலாச்சாரப் பிரச்சினையால் இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரத்தை புறக்கணித்து அன்னிய ஆடைக் கலாச்சாரத்தை பின்பற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்பதை முஸ்லிம் சமூகம் அறியுமா?
சில கல்வியற் கல்லூரிகளில் பிட்னஸ் என்ற உடற் பயிற்சிக்கு முஸ்லிம்  பெண்கள் அணியும் ஆடை எத்தனை பேருக்கு தெரியும்...?
சில காலங்கள் முன்பு பல்கலைக்கழக நுழைவின் முன் நடாத்தப்படும் ஆளுமைப் பயிற்சியின் போது முஸ்லிம் பெண் மாணவிகளை அணியுமாறு  கூறப்பட்ட ஆடைகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள்  தோற்று விக்கப்பட்டிருந்தது என்ற விடயமும் இங்கே சுட்டிக்காட்டப்படல் பொருத்தமாக அமையும் என நினைக்கிறேன்.
குறித்த ஆடை தான் அணிய வேண்டும் என வரையறுக்கப்பட்ட தொழில் நிறுவங்களில்,கல்வியல் கல்லூரிகளின் பிட்னஸ் போன்ற செயற்பாடுகளில்,பாடசாலைகள் ,பல்கலைக்கழகங்களில் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்படும் சில நிகழ்வுகள் போன்றவற்றில் முஸ்லிம் பெண் மாணவிகள் பிரச்சினைகளை எதிர்கொண்டு தான் இருக்கிறார்கள்,எதிர்கொள்ளத் தான் போகிறார்கள்.

மீடியாக்கள் உயிரோட்டத்தோடு இருக்கும் சில இடங்களில் ஏற்படும் இவ்வாறான நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வருகிறது.பல இடங்களில் நடப்பவை வெளிச்சத்திற்கு வருவதில்லை.
இலங்கை நாடு பௌத்த மதத்தை பின்பற்றும் மக்களை  பெரும்பாண்மையாய் கொண்ட நாடு ஆதலால் அவர்கள் அவர்களுடைய கலாச்சார  ஆடை முறைக்கே  முன்னுரிமை கொடுப்பார்கள்.அவ்வாறு கொடுப்பதை யாராலும் தடுக்கவும் இயலாது.
இவ்வாறான நிலைமைகள் எமது முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் போது அக் குறித்த நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்,தொழில் நிறுவனர்களுக்கு எமது இஸ்லாமிய கலாச்சாரத்தை விளங்க வைத்து ஒரு சிறு சலுகைகளை பெற்று இன்று பல முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய பாதையில் நடை பயில்கிறார்கள்,நடைபயில முயற்சிக்கிறார்கள்.
சலுகை எதையும் பெற இயலாதவர்கள் இஸ்லாத்தை அடகு வைத்து,அனுசரித்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
எத்தனை பேருக்கு விளங்கப்படுத்துவது?
பிரச்சனை எழும் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று தகுந்தோரால் புரிய வைப்பது எல்லா இடங்களிலும் சாத்தியமா??
முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்திற்கென ஒரு நிரந்தர சட்டம் இலங்கை அரசினால் இயற்றப்படுமாக இருந்தால் மாத்திரமே இப் பிரச்சினைகள் எதிர்காலத்தில் எழாது தடுக்க முடியுமான நிரந்தரத் தீர்வாக அமையுமே தவிர வேறு எந்த வழி முறைகளும் சரி வரப்போவதில்லை..
எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் இவ்வாறான விடயத்தில் கரிசனை கொள்வார்களா?எமது மூதாதையர் பெற்றுத் தந்த உரிமைகளை தக்க வைக்கவே திண்டாடும் எமது அரசியல்வாதிகள் இதுவெல்லாம் எங்கே பெற்றுத்தரப்  போகிறார்கள்?

எமது இலங்கை முஸ்லிம் அரசியல்,ஏனைய தற்கால நிலைமைகளை வைத்துப் பார்க்கும் போது இது சாத்தியமான ஒன்றா..? என்றே சிந்திக்க தோன்றுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top