சவூதி அரேபியா,
அரபு நாடுகளின் தலைவர்களுக்கு
எதிரான தாக்குதல் தொடங்கப்படும்
அமெரிக்க
கூட்டு படைகளின்
தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபூபக்கர்
அல் பாக்தாதி
உயிருடன் இருப்பதாக
நியுயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சில
தினங்களுக்கு முன்பு வெளியான அல் பாக்தாதியின்
17 நிமிட பேச்சு
அடங்கிய ஒலிநாடாவை
சுட்டிக்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுதாரிகளை
அழிக்க மேலும்
1500 படை வீரர்களை அனுப்பப்போவதாக கூறியுள்ள
அமெரிக்க ஜனாதிபதி
பராக் ஒபாமாவிற்கு தமது உரையில்
எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா
மற்றும் யூதர்களுக்கு
எதிராக ஜிஹாதி
எரிமலைகளாக வெடிக்குமாறு தமது ஆதரவாளர்களுக்கு அவர்
அழைப்பு விடுத்துள்ளதாகவும்
கூறப்படுகின்றது. சியா பிரிவனருக்கு எதிரான தாக்குதலை
தீவிரபடுத்த போவதாக கூறியுள்ள அல் பாக்தாதி
அதை தொடர்ந்து
சவூதி அரேபியா
மற்றும் அரபு
நாடுகளின் தலைவர்களுக்கு
எதிரான தாக்குதல்
தொடங்கப்படும் என எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த
திங்களன்று எகிப்து ஆயுத அமைப்பு ஒன்று அல்
பாக்தாதிக்கு ஆதரவு தெரிவித்தது. அன்றைய தினமே
அவர் இந்த
உரையை நிகழ்த்தியுள்ளதால்
அவர் அமெரிக்கா
தெரிவித்ததை போல் அவர் கொல்லபடவில்லை என்று
உறுதியாகியுள்ளதாகவும் நியுயார்க் டைம்ஸ்
நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment