கல்முனை ஸாஹிறா
தேசிய பாடசாலையின்
கிரிக்கெட் வீரர்களை பாராட்டி கௌரவிக்கும்
விழா
சாய்ந்தமருது
மருதம் கலைக்கூடல்
மன்றத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியில்
இடம்பெற்ற 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அகில இலங்கை சம்பியன் பட்டம்
பெற்ற கல்முனை
ஸாஹிறா தேசிய
பாடசாலையின் வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா
சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று
2014.11.09 ஆம் திகதி இடம்பெற்றது.
சாய்ந்தமருது
மருதம் கலைக்கூடல்
மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா
தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான
ஏ.எம்.ஜெமீல், சட்டத்தரணி
ஆரிப் சம்சுதீன்
ஆகியோர் அதிதிகளாக
கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்
சாய்ந்தமருது பிரதேச கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹ்மான், கல்முனை
ஸாஹிறா தேசிய
பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன், மாவட்ட
கலாசார ஒருங்கிணைப்பு
உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், சாய்ந்தமருது
பிரதேச செயலக
நிர்வாக உத்தியோகத்தர்
எம்.எம்.உதுமாலெப்பை, உட்பட
பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது
கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஸாஹிறா தேசிய பாடசாலை
அகில இலங்கை
சம்பியன் பட்டம்
பெற பயிற்றுவித்த
பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் அலியார் பைசர்,
கிரிக்கெட் துறையின் வர்ணணையாளர் சாக்கிர் கரீம்
ஆகியோர் பொன்னாடை
போர்த்தி நினைவுச்
சின்னம் வழங்கி
கௌரவிக்கப்பட்டதுடன் வீரர்களுக்கும் நினைவுச்
சின்னம், சான்;றிதழ் என்பனவும்
வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment