நிந்தவூர் தெற்கு கடற்கரையின் அவலம்

மு..உமர் அலி

நிந்தவூர் தெற்கு கடற்கரை வவ்வாலோடை களப்பில் முடிவடைகின்றது. இதன் மேற்குப்புறமாக குவைத் வீட்டுத்திட்டம் அமைந்திருக்கின்றது, இவ்விடத்தில் ரம்யமான காட்சியைக் கண்டுகளிப்பதற்காக உள்ளூர் வெளியூர் மக்கள் தினமும் வந்து செல்வதுண்டு.
டெங்கு ஒளிப்புத்திட்டத்தின்பொது ஊரில் ஒன்று சேர்க்கப்படும் பல்வேறுபட்ட உக்கக்கூடிய,உக்காத துர்நாற்றம் வீசக்கூடிய கழிவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு இந்தக்கடற்கரையில் வீதியோரம் கிழக்குப்பக்கமாக குவிக்கப்படுவதை அறியக்கிடைக்கின்றது. இதனால் மீனவர்கலும் ஏனையவர்களும் போக்குவரத்துச்செய்யும் இந்த அழகிய கடற்கரை இன்று அவலமாக காட்சியளிக்கின்றது தெருநாய்கள் இந்த இடத்தை வளைய வருகின்றன,காகங்கள் அழுக்க்குகளை பிரித்து அயலிலுள்ள வீடுகளில் கொண்டு சென்று போடுகின்றன, ஈக்கள் பெருகி நோய்களை அயலவர்களுக்கு காவிச்செல்லக்கூடிய அபாயமும் உண்டு ,தினமும் கடற்கரையில் உடற்பயிற்சி செய்வோரும்,உலாவருவோரும் மூக்கைப்பொத்திக்கொண்டு,முகத்தைச்சுளித்து செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது,
திட்டமிடப்படாத முறையில் குவிக்கப்படும் இந்த உள்ளூர்க்களிவுகளால் கடற்கரையின் சூழலும்,களப்பின் இயற்கை வளங்களும் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன,
எமது கடற்கரையின் வளங்களை நம்மைத்தவிர வேறு ஊர்களில் இருந்து வரும் எவரும் பாதுகாக்கப்போவதில்லை,
ஏற்கனவே கடல் மண் அகழ்வினால் பாதிக்கப்பட்டிருக்கும் இப்பிரதேசம் இவ்வாறு கழிவுகள் ஒன்று சேர்வதனால் முற்றிலும் கட்டமைப்பு மாறிய ஒரு அசுத்தமான சுற்றாடலை ஏற்படுத்தும் என்னும் கருத்தை யாரும் மறுக்க முடியாது,எதிர்காலத்தில் நன்னீர்,கடல் வளங்களும் பாதிக்கப்படும்,இதனால் மீனவர்களது வால்தாரம் மறைமுகமாக காலப்போக்கில் பாதிப்படைய வாய்ப்புக்கள் அதிகம்.
இந்தச்செயலினை இட்டு பிரதேச மக்கள்,நன்னீர்,உவர்நீர் மீனவர்கள்,மற்றும் பொதுமக்கள் தமது விசனத்தை தெரிவித்துக்கொள்கின்றனர்.
எனவே நிந்தவூர் பிரதேச சபை,கரையோர பாதுகாப்பு திணைக்களம்,நிந்தவூர் ஒன்பதாம் பிரிவு கிராம அபிவிருத்திச்சபை,நிந்தவூர் பிரதேச செயலகம் என்பன இந்த குப்பைகொட்டுதலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஏற்கனவே குவிக்கப்பட்டிருக்கும் குப்பைகளை வேறு பாதுகாப்பான உரிய இடத்தைத்தெரிவு செய்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் இது இப்பிரதேச மக்கள் விருப்பமாகும்.
தகவல்:- மீனவர்கள்,பொது மக்கள்

புகைப்படம்,மற்றும் தகவல் தந்து உதவிய நண்பர்களுக்கு நன்றி.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top