கல்முனை தொகுதியின் குப்பைத்தொட்டியாக (Dust bin) மாறும் கல்முனைக்குடி.........!

-          Riyas Sulaima Lebbe

நமது கல்முனை தொகுதிபாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உயரை ஓன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் என்ற இணையதளத்தில் காணக்கிடைத்தது.
அதில்
01 " உண்மையில் அம்பாறை கரையோர மாவட்ட கோரிக்கை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாக்கிய விடயம் இல்லை" என்று அவர் கூறியுள்ளார். இதுவரை காலமும் இந்த கோரிக்கை முஸ்லிம் காங்கிரசினுடயது என்று சொன்னவர்கள் இன்று அதையும் ஒரு சிங்களவன்தான் சொன்னான் என்று சொன்னால் நமது மக்களின் தேவை அறிந்து நமக்கான கட்சி முன்வைத்த தீர்வுதான் என்ன?
௦௨.அம்பாறையை எடுத்துக்கொண்டால் 68 சதவீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் மாவட்டம் ஆகும். அம்பாறை கச்சேரி சிங்கள மயமாக இருக்கின்றது. தங்களது நிர்வாக கடமைகளை செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றனர். என்று கூறியுள்ளார்.
100 சதவீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் கல்முனைக்கு ஒரு சிங்களவர் பிரதேச செயலாளராக வந்த போது பொது மக்கள் அதை எதிர்த்தனர். அவரை மாற்ற முயன்றனர். அப்போது இந்த சிங்கம் கல்முனைக்கு நானே ராஜா நானே மந்திரி என்று கர்ஜித்தது.அவரை மாற்றும் முயற்சியை நான் பார்க்கிறேன் என்றது. இன்று சிங்களம் தெரியாமல் மானமுள்ள கல்முனைக்குடியானுகள் எல்லாம் மனம் இழந்து நிட்கின்றானுகள்.
கரையோர மக்களின் வரலாறு தெரியாமல் அமைச்சர்களும் பிரதமரும் கரையோர மாவட்டம் பற்றி பேசுவதாக சொல்லியுள்ள நமது பாராளுமன்ற உறுப்பினருக்கு கல்முனையின் வரலாறு தெரியாதா?
கல்முனையில் சாஹிரா கல்லூரிக்கு நுழைவாயில் அமைக்க வேண்டும் என்று பாடசாலை சமுகம் எத்தனையோ தரம் சொல்லியும் காதில் வாங்காமல், கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரிக்கு முப்பது இலட்சம் கொடுத்து நல்ல பிள்ளையாகி விட்டார். அவரை விட கோடிக்கணக்கில் இந்த பாடசாலைக்கு உதவ வரும் மாற்றுக் கட்சி காரர்களின் உதவிகளை பெறக்கூடாது என்ற கட்டளை வேறு அதிபர்களுக்கு சொல்லபட்டிருக்கின்றது.
மானம் கேட்ட சில அதிபர்கள் தமது தகுதி, தம்மீது இந்த மக்கள் கொண்டிருக்கும் அத்தனை எதிர்பார்ப்புகளையும் மறந்து வரும் உதவிகளையும் வேண்டாம் என்று சொல்லி வருகின்றனர்.
சமூக பிரச்சினை பற்றி யோசிக்கிற நமது எம்.பி. அவர்கள் கொஞ்சம் கல்முனைக்குடி மக்களை பற்றியும் யோசியுங்கள். நமது முதல்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தம் வசம் வைத்திருப்பதனால் சாய்ந்தமருதும், மருதமுனையும் கல்முனையை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்று சிந்திக்க வைத்ததை தவிர எதையும் நாம் சாதிக்கவில்லை.
இரண்டுமுறை பாராளுமன்ற தேர்தலில் நின்று நீங்கள் கல்முனைக்குடிக்கு செய்தது என்ன என்று யோசியுங்கள்.
மூன்றாவது முறை நீங்கள் ஏன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று யோசியுங்கள்.
கல்முனைக்குடியில் கடந்த மாநகர சபை தேர்தலில் போட்டியிட பலத்த தேடுதலுக்கு பின்னேர் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்முனைக்குடி மக்களின் எதிர்கால அரசியல் வாரிசான இர்பான் பேக்கரி நாசர் மற்றும் நமது முன்னாள் மாகான சபை உறுப்பினர் ஜவ்வாத் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்முனைக்குடி மக்களின் எதிர்கால அரசியல் வாரிசான அப்பில் ஜவ்பர் ஹாஜியார் ஆகியோரை விட சிறந்தவர் என்று நினைத்து தெரிவு செய்யப்பட்ட நமது முதல்வர் காரியப்பர் அவர்களும் காரியத்தில் கண்ணாக இருக்காமல் உலகம் முழுவதும் ஒப்பந்தம் செய்து வருகின்றார்.

கல்முனைக்குடியில் கல்வியில் வீழ்ச்சி , பொருளாதாரத்தில் வீழ்ச்சி, அபிவிருத்தியில் வீழ்ச்சி, மீனவனின் வாழ்க்கை அதோ கதி.விவசாயம் இல்லை, சுத்தமான நீர் இல்லை, முறையான பாதைகள் இல்லை. நாளை பாராளுமன்ற உறுப்பினரும் இல்லை மேயரும் இல்லை என்று வரலாற்றை மாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top