நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த சர்ச்சை கார்ட்டூன்
பிரான்ஸ் பத்திரிக்கை அலுவலகம் மீது தாக்குதல்

துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலி


பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் கறுப்பு முகமுடி அணிந்திருந்த இரண்டு பேர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். பத்திரிக்கையில் கடந்த 2011ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து கேலிசித்திரம் வெளியாகியுள்ளது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாகியுள்ளனர். இதில் 9 பேர் பத்திரிக்கையாளர்கள் என்றும் இரண்டு பேர் காவல்துறையினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பாரிஸ் நகரில் மிகவும் பரபரப்பான சாலையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்திய தாக்குதல் அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. அங்கு பாதுகாப்பு தற்பொழுது பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் . நகர் முழுவதும் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மர்மநபர்கள் காரை கடத்தி, அதில் இருந்த வண்ணம் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர். சாலையில் சென்ற நபரை அருகே சென்று அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் காட்சி வெளியாகி பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். இதற்கிடையே பிரான்ஸ் முழுவதும் பொலிஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மர்ம நபர்கள் சாலையில் சென்றபோதும் அங்கு நின்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top