தேர்தல் கண்காணிப்பில் 45 ஆயிரத்து 524 அதிகாரிகள்
அடங்கிய யானைப் படை அணி களத்தில்
வட
மாகாணம் தவிர்ந்த
நாட்டின் ஏனைய
மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள 11,381 வாக்களிப்பு
நிலையங்களையும் கண்காணிப்பதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய
தேசியக் கட்சியின்
தொலைத்தொடர்பு படையணியொன்று, பணியில் அமர்த்தப்படவுள்ளது. 45 ஆயிரத்து 524 அதிகாரிகள் அடங்கிய இந்த
படையணி, இன்று
செவ்வாய்க்கிழமை (06) முதல் தங்களது
பணிகளை முன்னெடுக்கவுள்ளன
என்று ஐ.தே.க தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட மாகாணத்தில்
933 வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த வாக்களிப்பு
நிலையங்கள் தவிர்ந்த கிழக்கு மாகாணம் உட்பட
ஏனைய மாகாணங்களுக்கே
இவ்வதிகாரிகள் அனுப்பிவைக்கப்படவுள்ளனர். ஒரு
வாக்களிப்பு நிலையத்துக்கு நான்கு அதிகாரிகள் வீதம்
இவர்கள் கடமையில்
ஈடுபடவுள்ளனர்.
ஜனாதிபதி
தேர்தல் இடம்பெற்று,
பெறுபேறுகள் வெளியாகும் வரையில் பிரதேசங்களுக்குள் நுழையும் வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்த
நபர்கள், இனந்தெரியாத
வாகனங்கள், குழுக்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்கள்
தொடர்பிலும் இந்த அதிகாரிகள் கண்காணிப்பில் இருக்கவுள்ளனர்
என ஐக்கிய
தேசியக் கட்சியின்
தொலைத்தொடர்பு படையணியின் பணிப்பாளர் நாயகம் சுதத்
சந்தசேகர தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடிகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது
தொடர்பில் இப்படையணியில்
உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பூரண
பயிற்சி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு, புகைப்படங்களை எடுக்கக்கூடிய
அலைபேசிகள், வீடியோப் பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய கெமராக்கள், அலைபேசிகள் என்பன விநியோகிக்கப்பட்டுள்ளன
என்றும் அவர்
கூறியுள்ளார்.
மக்களின்
சுதந்திரமாக தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்க
முயற்சிக்கும் குழுக்கள் அல்லது நபர்களை புகைப்படம்
எடுத்தல், வீடியோப்
பதிவு செய்தல்,
அவர்களுடைய வாகனங்கள் தொடர்பான சாட்சிகளைத் திரட்டுதல்
உள்ளிட்ட பணிகளை
இந்த படையணியில்
உள்வாங்கப்பட்டுள்ள அதிகாரிகள் முன்னெடுக்கவுள்ளனர்.
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள வாக்குச்சாவடிகளை
அடையாளம் கண்டு,
அவற்றின் பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதற்காக மேற்படி படையணியைச்
சேர்ந்த மேலதிக
அதிகாரிகள் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்படுவர். கண்டி மாவட்டத்துக்குட்பட்ட
பாத்ததும்பர தேர்தல் பிரிவிலுள்ள வாக்குச்சாவடிகளைப் பாதுகாப்பதற்காக ஐ.தே.க.வினால் விசேட
நடவடிக்கையொன்று முன்னெடுக்கபடவுள்ளது என படையணியின் பணிப்பாளர்
நாயகம் மேலும்
கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment