உலகமே உற்று கவனித்துக்
கொண்டிருக்கும்
இலங்கை ஜனாதிபதித் தேர்தல்
வெல்லப் போவது
யார்?
ஸ்ரீலங்காவில்
நாளை 8 ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. நாளை காலை 7 மணிக்குத்
தொடங்கும் வாக்குப்பதிவு
மாலை 4 மணி
வரை நடைபெற
உள்ளது.
உலகமே
உற்று கவனித்துக்
கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் எதிர்க்கட்சிகளின்
பொது வேட்பாளர்
மைத்திரிபால சிறிசேனே இடையே நேரடிப் போட்டி
நிலவுகிறது தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 65 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுமார் 2 லட்சம்
பேர் தேர்தல்
பணியில் ஈடுபடுகின்றனர்.
வெளிநாட்டு தேர்தல் பார்வையாளர்கள் 55 பேர், தேர்தல்
கண்காணிப்புக்காக முகாமிட்டுள்ளனர்.
வாக்குகளை
எண்ணும் பணி,
நாளை இரவு
தொடங்கிவிடும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த
தேர்தலில், மஹிந்த ராஜபக்ஸவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையேதான் போட்டி
என்றாலும், மொத்தம் 19 பேர் களத்தில் உள்ளனர்.
இவர்களில், வாக்காளர்களை குழப்புவதற்காக,
சிறிசேன என்ற
பெயரில் வேறு வேட்பாளர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர். எனவே, பெயர் மட்டுமின்றி, கட்சி,
சின்னம் ஆகியவற்றையும்
கவனித்து, விரும்பிய
வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய நிலை வாக்காளர்களுக்கு
உள்ளது.
இந்த
குழப்பத்தையும், எதிர்க் கட்சி வேட்பாளரின் கடும்
போட்டியையும் மீறி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீண்டும்
வெற்றி பெறுவாரா
என்பது நாளை
மறுநாள் தெரிந்து
விடும்.
0 comments:
Post a Comment