கடைசி நேரத்தில்
தேர்தல் முடிவை இரத்து செய்வதற்கு
மஹிந்த ராஜபக்ஸ தீட்டிய திட்டம் அம்பலம்!
தேர்தல்
தோல்வியை ஜீரணிக்க
முடியாமல் கடைசி
நேரத்தில் நெருக்கடி
நிலையை அறிவித்து
தேர்தல் முடிவை
இரத்து செய்வதற்கு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தீட்டிய
திட்டம் அம்பலமாகி உள்ளது.
கடந்த
8 ஆம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட்ட மஹிந்த
ராஜபக்ஸ தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து
நின்ற மைத்ரிபால
சிறிசேன வெற்றி பெற்று மஹிந்தவின் 10 ஆண்டு கால
ஆட்சிக்கு முடிவு
கட்டினார்.
இதனிடையே,
நேற்று முன்தினம்
காலை தேர்தல்
முடிவுகள் மைத்திரிக்கு
சாதகமாக வரத்
தொடங்கிய நிலையில்,
தோல்வியை ஜீரணிக்க
முடியாத மஹிந்த
கடைசி நேரத்தில் ஆட்சியை தக்க
வைத்துக் கொள்வதற்கு
பல்வேறு நடவடிக்கைகளில்
ஈடுபட்டது, இப்போது அம்பலமாகி உள்ளது.
தோல்வியின்
விளிம்பில் இருந்த மஹிந்த ஜனாதிபதி மாளிகையில்
இருந்தவாறே நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த முயன்று
இருக்கிறார்.
ஆனால்
இதை இலங்கையின்
அட்டர்னி ஜெனரல்
அறவே ஏற்க
மறுத்து விட்டார்.
இராணுவ அதிகாரிகளும்
ராஜபக்சேவின் நெருக்கடி நிலை பிரகடன யோசனையை
நிராகரித்து விட்டனர்.
இதேபோல்
தலைமை தேர்தல்
செயலகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அதன் வாயிலாக
பொலிஸாரை அங்கே
அனுப்பி வைத்து
தேர்தல் முடிவுகளை
இரத்து செய்ய
மஹிந்த எடுத்துக் கொண்ட இறுதிக்கட்ட முயற்சிக்கும் சூழ்நிலைகள்
இடம் கொடுக்கவில்லை.
அதே
நேரம் குறுக்கு
வழியில் மீண்டும்
ஆட்சியை தக்க
வைத்துக் கொள்வதற்காக
மஹிந்த கையாண்ட நடவடிக்கைகள் ஐக்கிய தேசியக் கட்சித்
தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிய வந்தது.
அவர் உடனே
ஜனாதிபதி மாளிகைக்கு சென்று மஹிந்த ராஜபக்ஸவை
சந்தித்தார்.
தேர்தல்
முடிவுகள் விஷயத்தில்
நீங்கள் ஏதாவது
விபரீத முடிவுகளை
எடுத்தால் அதில்
வேறு பெரிய
நாடுகள் தலையிட
நேரிடும் என்று
அவர் மஹிந்தவுக்கு
அறிவுறுத்தினார்.
இதுமாத்திரமல்லாமல்
ரணில் விக்கிரமசிங்க மஹிந்தயிடம்,
‘புலிகளை அழித்தவர்
என்ற நல்ல
பெயர் சிங்களர்
மத்தியில் உங்களுக்கு
இருக்கிறது. அந்த நற்பெயரோடு போய்விடுங்கள். குழப்பம்
விளைவித்தால் அது உங்களுக்கு சிங்களர்கள் மத்தியில்
இருக்கும் புகழை
கெடுத்துவிடும்’ என்றும் எடுத்துக் கூறி இருக்கிறார்.
இதன்
பிறகே பிரச்சினை
செய்யாமல் அமைதியாக
வெளியேறுவதே நல்லது என்ற முடிவுக்கு மஹிந்த ராஜபக்ஸ வந்தார்
என்று கூறப்படுகிறது.
மேலும்
உள்ளூர் விமான
நிலையம் வரை
விக்கிரமசிங்க, ராஜபக்ஸ குடும்பத்தினரை பாதுகாப்பாக இறக்கிவிட்டதாகவும்,
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் அம்பாந்தோட்டை
யில் உள்ள தனது சொந்த வீட்டை சென்று அடைந்தார்
என்றும் தகவல்கள்
வெளியாகி உள்ளன.
அம்பாந்தோட்டை
சென்று இறங்கியபோது
மஹிந்தவுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டு இருந்தது. உள்ளூர்
மக்கள் அவருக்கு
வரவேற்பு அளித்து
பாதுகாப்பாக அவருடைய வீடு வரை அழைத்துச்
சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்தவர்களில்
பலர் கண்ணீர்
விட்டு அழுதனர்.
அவர்களிடையே
மஹிந்த ராஜபக்ஸ பேசும்போது, “வடக்கு, கிழக்கு,
மலையக பகுதிகளில்
வசிக்கும் தமிழர்கள்
எனக்கு எதிராக
ஓட்டுப் போட்டதே
தோல்விக்கு காரணம். தமிழர்களின் ஓட்டுகளால் கிடைத்த
தோல்வியை என்னால்
ஏற்க முடியாது.
இதனை நான்
ஒரு தோல்வியாகவே
கருதவில்லை. எனவே இதற்காக நீங்கள் கவலைப்படவேண்டிய
அவசியமும் இல்லை.
சிங்களர்களை விட்டு அதிகாரம் இன்னும் சென்றுவிடவில்லை.
எனது தோல்வியால்
தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை”
நாடாளுமன்றத்தில்
பெரும்பான்மையைக் கொண்ட கட்சியின் தலைவரான நான்
இப்போது வெளியே
இருக்கிறேன். ஆனால் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப்
பெற்றுக்கொள்ளாத ஒருவர் இப்போது பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார்.
என
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தங்காலை
'கால்ட்டன் ஹவுஸ்' இல்லத்துக்கு வருகை தந்திருந்த
பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர்
இதனை தெரிவித்துள்ளார்.
அவர்
மேலும் தெரிவித்திருப்பதாவது,
நான்
நாட்டைவிட்டுத் தப்பியோடமாட்டேன். இங்குதான்
இருப்பேன். நான் எனது நாட்டையும் எனது
மக்களையும் நேசிக்கிறேன். ஆகவே இதுதான் எனக்கு
புகலிடம்.வேறு
எங்கும் செல்லமாட்டேன் நாடு ஒரு மாற்றத்தை
வேண்டுகிறது என்று கூறினார்கள். அதற்குத் தானே
நீங்கள் வாக்களித்துள்ளீர்கள்,
அதைத்தான் கொடுத்தீர்கள்.
ஆகவே இப்போது
மாற்றம் வந்துள்ளது
என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். நான்
ஆட்சியை விட்டுப்
போனாலும் கட்சியை
விட்டுப் போகமாட்டேன். நாட்டைவிட்டு
ஓடிவிடுவேன், ஆகவே விமானத் தளத்தை மூடவேண்டும்,
காவல் போடவேண்டும்
என்றெல்லாம் பரப்புரை செய்தார்கள். நான்
நாட்டைவிட்டுத் தப்பியோடமாட்டேன். இங்குதான்
இருப்போன். எனது நாட்டையும் எனது மக்களையும்
நேசிக்கிறேன். ஆகவே இதுதான் எனக்கு புகலிடம்.
வேறு எங்கும்
செல்லமாட்டேன். உங்களுக்குத் தெரியும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட கட்சித் தலைவர்தான்
பிரதமராகவேண்டும். நாடாளுமன்றத்தில்
128 உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சியின்
தலைவன் நான்தான்.
நான் இன்று
வெளியே இருக்கிறேன்.
ஆனால் அறுதிப்
பெரும்பான்மை பெற்றிராத கட்சியின் தலைவர் பிரதமராகியுள்ளார்
என அவர்
தெரிவித்துள்ளார் என்றார்.
தேர்தல்
முடிவுகள் தங்களுக்கு
சாதகமாக வரவில்லை
என்பது தெரிந்ததும்,
மஹிந்த ராஜபக்ஸவின் இன்னொரு சகோதரரும்,
முன்னாள் பாதுகாப்புச்
செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ விமானம்
மூலம் மாலத்தீவு
நாட்டுக்கு சென்றுவிட்டார் தகவல்கள் வெளியானது.
இது
பற்றி அந்நாட்டின்
வெளிநாட்டு அமைச்சு ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் வெளியிட்ட
தகவலில் இலங்கையின்
முந்தைய அரசில்
இருந்து சில
முக்கிய தலைவர்கள்
இங்கே தப்பி
வந்துள்ளனர் என்ற தகவலை நாங்கள் மறுக்கிறோம்
என்று கூறப்பட்டு
உள்ளது.
அதே
நேரம், ‘ராஜபக்சே
மீண்டும் அரசியல்
நீரோட்டத்துக்கு வருவார். அவர் வீட்டில் இருக்க
நாங்கள் அனுமதிக்க
மாட்டோம்’ என்று
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு நெருக்கமானவரும் முன்னாள்
அமைச்சருமான விமல் வீரவன்ச ஊடகவியலாளர்களிடம்
கூறினார்.
0 comments:
Post a Comment