நண்பர்களுக்கு...

 மாணிக் வீரமணியின் அறிவுரை!


நேற்று முழுக்க சகோதரி ரஹீமா() மோனிகாவின் திருமண புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் நன்றி...
இதற்கு முன்னர் காலிக்()யுவன் திருமணத்தின் போதும் இதே போல படம் பதிந்து வாழ்த்து சொன்னீர்கள்...
வாழ்த்து சொல்வது சரி..அவர்களின் திருமண புகைப்படம் எதற்கு??
உங்களில் எவரும் அவரவர் மனைவியோடு இருக்கும் திருமண படத்தை ஒருமுறை கூட பதியவில்லையே?? ஏன்?
காரணம் நான் சொல்லட்டுமா??
ஏனென்றால் நமது வீட்டு பெண்கள் நமக்கு பொக்கிஷம்...அடுத்த வீட்டு பெண்கள் என்றால் உள்ளூர ஒரு இளக்காரம்...
அவங்க தான போட்டோ எடுத்து நெட்ல போட்டாங்க...அதைத்தான நாங்களும் எடுத்து போஸ்ட் போட்டோம்னு கேக்குறீங்களா?
நெட்ல அசிங்கமானதும் கூட வருது..அதையும் எடுத்து போஸ்ட் போடுங்களேன்...
ஏற்கனவே இஸ்லாமின் மீது தவறான சாயம் பூச துடிக்கும் கயவர்களுக்கு நீங்களே பாய்ண்ட் எடுத்து குடுத்தா என்ன அர்த்தம்??
இன்னும் நீங்க காலிக்கின் மனைவியையும் ,ரஹீமாவையும் உங்கள் வீட்டு மனிதர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்??
இஸ்லாமுக்கு எதிரானவன் தான் அவர்களின் திருமண படத்தை போட்டு கேவலப்படுத்துகிறார்கள் என்றால் நம்மவர்களும் நல்லது என நினைத்துக்கொண்டு அதே தவறை செய்கிறார்கள்...
வாழ்த்து சொல்ல புகைப்படம் அவசியமா என்ன??
நம் வீட்டு பெண்களின் புகைப்படத்தை முகநூலில் பதியக்கூடாது என அத்தனை பேருக்கும் அறிவுரை கொடுத்துவிட்டு அடுத்த வீட்டு பெண்களின் புகைப்படத்தை மட்டும் முகநூலில் பதிவது எந்த வகையில் சரியாகும்????
எதிரிகள் நம்மிடம் எதிர்பார்ப்பதும் இதைத்தான்...

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top