மைத்திரி
தலைமையில்
நாம் நீதியான
ஒரு ஆட்சியை நிறுவுவோம்
- ஐ.தே.க மேல்மாகாணசபை
உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
கடந்தமுறை
தேர்தலின் போது யுத்தவெற்றியை முலதனமாகக் கொண்டு வெற்றியடைந்த மஹிந்த ராஜபக்ஸ இம்முறையும் அதே யுத்தத்தை மக்களுக்கு காட்டி இம்முறை
தேர்தலையும் வென்றுவிடலாம் என்ற மமதையில் இருந்தார். அவருக்கு இந்நாட்டு சிறுபான்மை
மக்கள் நல்ல பாடத்தை புகட்டியுள்ளனர்.
தற்பொழுது
வெளியிடப்பட்டு வரும் தேர்தல் முடிவுகள் தொடர்பில்
ஐ.தே.க மேல்மாகாணசபை
உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அவர்
மேலும் தெரிவித்திருப்பதாவது,
“ கடந்தமுறை
தேர்தலின் போது
யுத்தவெற்றியை முலதனமாகக் கொண்டு வெற்றியடைந்த மஹிந்த
ராஜபக்ஸ
இம்முறையும் அதே யுத்தத்தை
மக்களுக்கு காட்டி இம்முறை தேர்தலையும் வென்றுவிடலாம்
என்ற மமதையில்
இருந்தார். அதற்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக
இனவாத சக்திகளை
உரமூட்டி சிறுபான்மை
மக்களை அச்சுறுத்தும்
செயற்பாடுகளின் பின்னணியில் இருந்தது. பொரும்பான்மை இன
மக்களின் வாக்குகளை
மாத்திரமே நம்பி
களத்தில் இறங்கிய
மஹிந்த ராஜபக்ஸவிற்கு
இந்நாட்டு சிறுபான்மை
மக்கள் நல்ல
பாடத்தை புகட்டியுள்ளனர்.
இந்நாட்டு சிறுபான்மை
மக்களின் வாக்குகள்
தான் இந்நாட்டின்
தலைவரை தீர்மானிக்கும்
தீர்மான சக்தியாக
விளங்குகிறது என்பதை இம்முறை நாம் அழுத்தமாக
கூறியுள்ளோம். இந்நாட்டில் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட
அரசியல் செல்லுபடியாகாது
என்பதை இந்நாட்டு
மக்கள் நிரூபித்திருக்கின்றனர்.
மைத்ரீபால சிரிசேன
தலைமையில் நாம்
நீதியான ஒரு
ஆட்சியை நிறுவுவோம்
என்பதை இவ்விடத்தில்
கூறிக்கொள்ள விரும்புகிறேன்.”
0 comments:
Post a Comment