கல்முனை ஸாஹிறாவின் கல்வித் தரம்

எங்கே செல்கின்றது?

கல்முனை கல்வி சமூகம் கவலை!

·    






-                கல்முனை ஸாஹிறாவிலிருந்து மருத்துவ பீடத்திற்கு மாணவர்எவரும் தெரிவாகவில்லை!
      ----தேசியரீதியாக மதிப்புப் பெற்று வரலாறு படைத்துக்கொண்டிருந்த இத்தேசிய பாடசாலைக்கு இன்று என்ன நடந்துவிட்டது!!

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையிலிருந்து இம்முறை மருத்துவத்துறைக்கு எவரும் தெரிவாகாத நிலையில்  ஒரே ஒரு மாணவர் மட்டும் பொறியியல்துறைக்கு தெரிவாகி இருப்பது குறித்து கல்முனைப் பிரதேச கல்வி சமூகம் இக்கல்லூரியில் கல்வி புகட்டப்படுவதில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு குறித்து கவலையை வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் இக்கல்லூரியிலிருந்து வருடா வருடம் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் மருத்துவத் துறைக்கும் பொறியியல் துறைக்கும் தெரிவாகி கல்லூரிக்கும் இப்பிரதேசத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்தார்கள். (விபரங்களை அட்டவணையில் பார்க்கமுடியும்)
1949.11.16ல் ஆரம்பிக்கப்பட்டு தேசிய ரீதியாக மதிப்புப் பெற்று வரலாறு படைத்துக்கொண்டிருந்த இத்தேசிய பாடசாலைக்கு இன்று என்ன நடந்துவிட்டது என்றும் கல்முனை கல்வி சமூகம் கேள்வி எழுப்புகின்றது.
கல்முனைக் கல்வி வலயத்தில் அமைந்திருக்கும் பல உயர்தர பாடசாலைகளில் பல மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் பொறியியல்துறைக்கும் தெரிவாகியுள்ள நிலையில் ஏன் இக்கல்லூரியிலிருந்து கடந்த சில வருடங்களாக மருத்துவத்துறைக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படாமல் பின் தள்ளப்பட்டிருக்கிறார்கள்? என்ற கேள்வியும் பெற்றோர்களாலும் கல்விச் சமூகத்தாலும் எழுப்பப்படுகின்றது.
இக்கல்லூரி அமைந்துள்ள பாதையில் இக்கல்லூரி உருவாக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பின்னர் 1971.01.01ல் பெண்களுக்கு என தனியாக ஆரம்ப்பிக்கப்பட்ட கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலிருந்து இம்முறை 5 மாணவிகள் மருத்துவத்துறைக்கும் 3 மாணவிகள் பொறியியல்துறைக்கும் தெரிவாகி இருக்கும்போது கல்முனை ஸாஹிறாவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஏன் இந்தக் கல்லூரியில் கற்கும் மாணவர்ளை மருத்துவர்களாகவும் பொறியியலாளர்களாகவும் பல்கலைக்கழகம் அனுப்ப முடியாமல் உள்ளது?
கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள  கார்மேல் பத்திமா கல்லூரியில் 6 மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் 3 மாணவர்கள் பொறியியல்துறைக்கும் மருதமுனை அல்-மனார் மஹா வித்தியாலயத்தில் 3 மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் நிந்தவூர் மஹா வித்தியாலயத்தில் 2 மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதேவேளை, சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட சம்மாந்துறை மத்திய மஹா வித்தியாலயத்திலிருந்து 6 மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் 3 மாணவர்கள் பொறியியல்துறைக்கும்  தெரிவாகியுள்ள நிலையில் கல்முனை ஸாஹிறா மாணவர்களுக்கு என்ன நடந்துவிட்டது?
கல்முனை ஸாஹிறாவில் தேவைக்கு மேலதிகமாக உயிரியியல் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அப்படியானால் இங்கு உயர்தரம் கற்கும் விஞ்ஞான மாணவர்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது?
கலை, வர்த்தகம் ஆகிய துறைகளில் மாணவர்கள் பட்டம் பெறுவதைக் குறைப்பதற்கென தற்பொழுது தொழில் நுட்பத்துறையில் பட்டம் பெறுவதற்கு வழிகாட்டப்படுகின்றது. இத்துறையில் செல்லும் மாணவர்கள் B.Tch பட்டத்தையே பெறமுடியும் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இக்கல்லூரியில் உயிரியியல் விஞ்ஞானம், பெளதிக விஞ்ஞானம் ஆகிய துறைகளில்  திறமையாக கற்கக்கூடிய மாணவர்களை இக்கல்லூரியிலுள்ள ஒரு சில விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்கள் தொழில் நுட்பத்துறைக்கு வழி காட்டுவதாகவும் பெற்றோர்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.
எல்லாவத்திற்கும் மேலாக இக்கல்லூரியில் அதிபராக இருந்த அதிபர்கள் கல்லூரியினதும் மாணவர்களினதும் முன்னேற்றம் கருதி கல்லூரிக்குள்ளேயே தமது முழு நேரத்தையும் செலவழித்தனர். இதற்கு உதாரணமாக (01.04.1964 – 15.10.1966) அதிபராகப் பதவி வகித்த கே.எம். அபூபக்கர் அவர்களைக் குறிப்பிட முடியும்,
ஆனால், இன்று இக்கல்லூரியில் என்ன நடக்கின்றது 7.30 தொடக்கம் 2.30 வரை கடமையாற்றுகின்றார்கள். 

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியிலிருந்து
பல்கலைக்கழகம் சென்றவர்கள் விபரம்(1968-2006)
மருத்துவம்        104 மாணவர்கள்
பொறியியல்       124 மாணவர்கள்
பல் மருத்துவம்    04  மாணவர்கள்
மிருக வைத்தியம்  04 மாணவர்கள்
சட்டம்                03 மாணவர்கள்
ஏனைய துறைகள் 662 மாணவர்கள்  மொத்தம்-----901 மாணவர்கள்

ஆண்டு
மருத்துவம்
பொறியியல்
ஏனையவை
மொத்தம்
1987
08
03
18
29
1988
03
02
11
16
1989
03
05
22
30
1990
06
05
21
32
1991
03
03
24
30
1992
03
03
17
23
1993
04
06
22
32
1994
06
02
23
31
1995
07
04
21
32
1996
02
05
27
34
1997
04
05
25
34
1998
01
06
31
38
1999
07
04
22
33
2000
07
04
22
33
2001
01
08
23
32
2002
03
04
24
31
2003
02
05
26
33
2004
02
05
33
40
2005
01
05
38
44
2006
04
08
29
41
 

  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top