வங்கதேச 2 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தூக்கு
உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
வங்கதேச
விடுதலைப் போரின்போது
போர்க் குற்றங்களில்
ஈடுபட்டதாக, அந்த நாட்டின் இரு எதிர்க்கட்சித்
தலைவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உச்ச
நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உறுதி
செய்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும்
எந்நேரமும் தூக்கிலிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானிடமிருந்து
விடுதலைப் பெறுவதற்கான
போராட்டம் வங்கதேசத்தில்
கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக
படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில்
ஈடுபட்டதாக எதிர்க் கட்சிகளான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின்
பொதுச் செயலாளர் அலி அஷன் முஹம்மது முஜாஹித்
மற்றும் வங்கதேச
தேசியவாதக் கட்சியின் தலைவர் சலாவுதீன் காதர்
செளத்ரி ஆகியோருக்கு
அந்த நாட்டு
நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்திருந்தன.
இதையடுத்து,
அந்தத் தண்டனைக்கு
எதிரான மேல்
முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டன. இந்த நிலையில், தலைமை
நீதிபதி சுரேந்திர
குமார் தலைமையில்
நான்கு நீதிபதிகளைக்
கொண்ட அமர்வு
அந்த மனுக்களை
புதன்கிழமை நிராகரித்தது.
இதையடுத்து
அவர்களைத் தூக்கிலிடுவதற்கான
கடைசி தடையும்
விலகியுள்ளதால், அவர்கள் எந்த நேரமும் தூக்கிலிடப்படலாம்
என அரசுத்
தரப்பு வழக்குரைஞர்கள்
தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment