சோபித தேரரின் மறைவுக்கு
சமாதானத்திற்கான சமயங்களின் பேரவை அனுதாபம்
கோட்டே
நாக விகாராதிபதி
அதி சங்கைக்குரிய
மாதுளுவாவே சோபித தேரரின் மறைவுக்கு சமாதானத்திற்கான
சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாரை
மாவட்டக் கிளை
தனது ஆழ்ந்த
அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது.
அதன்
தலைவர் டாக்டர்
எம்.ஐ.எம்.ஜெமீல்
தலைமையில் 2015.11.08ம் திகதி
நடந்த செயற்
குழுக் கூட்டத்தில்
மேற்படி அனுதாபப்
பிரேரணை நிறைவேற்றப்
பட்டது.
2015 ஜனவரி 08 ல் இந்நாட்டில்
ஏற்பட்ட நல்லாட்சிக்கு சோபித தேரர் பெரும்
பங்களிப்புச் செய்தார்; நல்லாட்சிக்கான தேசிய மக்கள்
இயக்கம்
ஒன்றை உருவாக்கி
முன்னாள் ஜனாதிபதி
சந்திரிகா பண்டாரநாயக
குமாரதுங்க தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன
பிரதம மந்திரி
ரணில் விக்கிரமசிங்க
ஆகியோருடனும் ஏனைய சமயத் தலைவர்களுடனும் தொடர்ச்சியான
தொடர்பாடல்களை மேற்கொண்டு சுமார் 110 சிவில் சமூக
அமைப்புகளை ஒன்று திரட்டி முதலில்
நல்லாட்சிக்கும் அதன் பின் தேசிய அரசாங்கம்
உருவாக்கவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.
இவர் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்
பேரவையின் சிரேஷ்ட பிரதித்
தலைவராக சிறப்பாகச்
செயலாற்றினார். சமய விவகாரங்களில் மட்டுமன்றி சமூக
அரசியல் விவகாரங்களிலும்
துணிச்சலுடன் பங்காற்றி வந்தமை மூலம் அனைத்து
இன
மக்களும் உணர்வு
பூர்வமாக அவரை
மதிக்கும் உன்னத
நிலையை ஏற்படுத்தினார்
அவரின்
ஆன்மா சாந்தியடையப்
பிரார்த்திப்பதோடு அவரின் பிரிவால்
துயருறும் அவரின்
குடும்பம் மற்றும்
இலங்கை
மக்களுடன் எமது
அம்பாரை மாவட்டக்
கிளையும் இணைந்து கொள்கின்றது.
0 comments:
Post a Comment