உதிரம் கொடுத்து

உங்களாலும் மூன்று உயிர்களுக்கு உதவ முடியும்

Dr. A.R.M.Nihal

(எதிர்வரும் December 05 ம் திகதி, சனிக்கிழமை மாபெரும் இரத்த தான நிகழ்வொன்றை கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இனைந்து Manarian's-95 அமைப்பானது மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி பெண்கள் பிரிவில் ஏற்பாடு செய்துள்ளதை முன்னிட்டு எழுதப்பட்ட ஒரு கட்டுரையாகும்)



"எவர் அதனை(ஓர் ஆத்மாவை) வாழவைக்கின்றாரோ அவர் மனிதர்கள் யாவரையும் வாழவைத்தவர் போலாவார்" (ஸூறா அல்-மாயிதா:32)
      வெற்றிகரமான இரத்ததானம் என்பது வரலாற்றிலே முதலாவதாக 1818ல் பிரித்தானியாவைச் சேர்ந்த மகப்பேற்று நிபுணர் DR. James Blundell என்பவரினால் மேற்கொள்ளப்பட்டது. என்றாலும் ஒழுங்கமைக்கப்பட்ட இரத்த வங்கியானது 1930ல் Russiaவினால் உருவாக்கப்பட்டது. எனினும் USAஜச் சேர்ந்த Bernard Fantus என்பவரால் 1937ல் "BLOOD BANK" எனும் வார்த்தை உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டது.
           இலங்கையில் 1950ல் இரத்ததானம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும்1959ல் அப்போதய பிரதமராக இருந்த SWRD. Bandaranaike அவர்கள் சுடப்பட்ட சந்தர்ப்பத்தில் மக்களிடம் இரத்ததானம் செய்யுமாறு கோரப்பட்டதைத் தொடர்ந்து இதனுடைய முக்கியத்துவம் உணரப்பட்டு பிரபல்யம் அடைந்தது.
         பின்னர் இதன் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டு பண்முகப்படுத்தப்பட்டது.1960-1970 காலப்பகுதிகளில் இரத்தம் கண்ணாடிப் போத்தல்களில் அடைக்கப்பட்டே வினியோகிக்கப்பட்டது. 1981ம் ஆண்டிலேயே இலங்கை தேசிய வைத்தியசாலையில் plastic bags அறிமுகப்படுத்தப்பட்டு நடமாடும் இரத்த வங்கி உருவாக்கப்பட்டது.
          1979ம் ஆண்டு முதல் இரத்ததிற்காக பணம் கொடுக்கும் முறை அகற்றப்பட்டு, தானமளிக்க ஊக்குவிக்கப்பட்டது. இதனால் தூய்மையானதும் தொற்று  நோய்களிலிருந்து பாதுகாப்பாதுமான குர உறுதிப்படுத்தப்பட்டது.
        1999முதல் நாரஹேன்பிடவில் தேசிய இரத்த வங்கி (NBTS) நவீனமயப்படுத்தப்பட்ட சேவைகளுடன் உருவாக்கம் பெற்றது. 2014ம் ஆண்டின் தரவின்படி ஆண்டுக்கு 350000 க்கு மேற்பட்டோர் தன்னார்வ குருதி வழங்குனர்களாக பதியப்பட்டுள்ளனர். பெறப்படுகின்ற குருதி நேரடியாகவல்லாமல் பல பரிசோதனைகளுக்கும், படிமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டு சேமிக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது.
        சிறு ஊசியும், உங்களின் சிறிதுநேர அர்ப்பணிப்பும் மூன்று உயிர்களுக்கு உதவ முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
          இரத்தம் வழங்குவதன் மூலம்  இரத்தம் பெறுருக்கு மட்டுமன்றி அதனை வழங்குபவர்களுக்கும் பல நன்மைகளை கிடைக்கின்றன.
1- இதில் முதன்மையானது Self Satisfaction and The joy of saving life.
2- ஆரோக்கியமான இரத்த ஓட்டம். குருதியின் பாகுநிலைத் தன்மை குறைவடைகிறது, இதன்மூலம் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
3- இலவச குறுகிய மருத்துவ பரிசோதனை (ஆரோக்கியமானவர்கள் மாத்திரமே இரத்ததானம் செய்ய முடியும். எனவே உங்களின் உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு, இரத்த அமுக்கம், இரத்ததின் அளவு, என்பனவற்றுடன் 13 வகையான தொற்று நோய்களுக்கான பரிசோதனையாகவும் காணப்படுகின்றது.)
Eg: HIV,  Malaria, Hepatitis B&C,, Syphilis.
4- தேவையற்ற மேலதிக கலோரிகளை அகற்ற முடியும்.
ஓரு தடவை இரத்ததானம் செய்தால் 650 கிலோகலோரி அகற்றப்படுகிறது. இது உங்கள் உடல் நிறையைக் குறைக்க உதவுகின்றது.
5- உடலின் இரும்புச்சத்தின் அளவு பேணப்படுகின்றது.
மேலதிகமான இரும்புச்சத்துக்களை அகற்ற இது ஒரு இலகுவான வழிமுறையாகும். இதனால் இதயம் பலமடைகிறது, மேலும்,அதிக இரும்புச்சத்தானது புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றது.
6- புதிய இரத்தக் கலங்களின் உருவாக்கம், ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அதிகரிக்கிறது.
7- இரத்தம் வழங்கும் அந்த நிமிடங்களில் உங்களின் உடலும், உள்ளமும் ஓய்வாக இருக்கின்றது.                          2012ம் ஆண்டில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் தொடர்ச்சியாக இரத்ததானம் செய்வதினூடாக உடல்குருதியமுக்கம், நாடித்துடிப்பு, இரத்தத்தில் சீனி மற்றும் கொழுப்பின் அளவு( HbA1C, LDL, HDL level and ratio)  என்பன பேணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
இரத்ததானம் செய்ய ஏன் மக்கள் தயங்குகின்றனர்????
      இதற்கான காரணங்களை கண்டறியும் போது,,,,,,,,,
1- பலர் ஊசி குத்துவதற்கு பயப்படுகின்றனர்.
2- தனக்கு ஏதாவது ஒரு தொற்றுநோய் காணப்படுமோ என்ற பயம்.
3- எனக்கு ஏற்பட்டிருக்கின்ற நோய்கள் காரணமாக எனது குருதியானது பிரயோசனமற்றதாக ஆகிவிடும் என்று நினைத்தல்.
4- என்னிடம் மேலதிகமாக குருதி இல்லை என்று எண்ணுதல். ஆனால் ஒருவருடைய உடல் நிறையில் 7%  மட்டுமே குருதியின் அளவாகும். அத்துடன்குருதியானது தொடர்ச்சியாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றது. ஒரு முழுமையான குருதி வழங்களின் 56 நாட்களில் இது ஈடுசெய்யப்படுகின்றது.
5- எனது இரத்தம் செறிவற்றது, மென்மையானது என்ற எண்ணம்.
Minimum HB level is 12.5gldl
6- மயக்கம், தலைச்சுற்றுதல் ஏற்படும் என்ற பயம்.
7- இரத்தத்தை எடுப்பவர்கள் அதிகமாக எடுத்து விடுவார்கள், நான் பலஹீனமானவனாக மாறிவிடுவேன் என்ற அச்சம். (சாதாரண  மனிதனில் 10 Pints குருதி உள்ளது இதில் ஒரு Pint குருதியே பெறப்படும்) மேலும் இரத்தம் வழங்களின் பின் Refreshment வழங்கப்படும்.
8- தான் மிகவும் Busy எனக்கு நேரமில்லை என்பதனூடாக ஒதுங்கிவிடல். (இரத்ததானம் வழங்குதல் மிகவும் இலகுவானது குறிப்பிட்ட ஒரு மணிநேரத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும்)
9-மற்றவர்கள் வழங்குவர் நான் எதற்கு, எனது குருதி வகை தாராளமானது Demand அற்றது எனும் அலட்சிய மனப்பாண்மை. (இவ்வாறு ஒவ்வொருவரும் நினைத்து ஒதுங்கினால், உலகில் 30 பேரில் ஒருவரே இரத்ததானம் செய்கின்றனர். எனினும் மூவரில் ஒருவருக்கு குருதி தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது)
          மேலே சொல்லப்பட்ட காரணங்களால் இரத்ததானம் வழங்குவதிலிருந்து ஒருவர் ஒதுங்கிக் கொள்ள நினைத்தால் அவர் இம்மையிலும், மறுமையிலும் கிடைக்கின்ற பல்வேறு நன்மைகளை இழந்துவிடுகின்றார். ஏனென்றால் இந்த உலகில் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மிக உயர்ந்த படைப்பினமான மனித இனத்துக்கு உதவி செய்வது என்பது எமக்கு கிடைக்கப் பெற்ற மிகப் பெரும் பாக்கியமாகும். இதனை சூறா அல்-மாயிதாவின் 32ம் வசனம் தெளிவுபடுத்துகிறது.
          எனவே எமது மார்க்கம் சொல்லுகின்ற மிகப்பெரிய உபதேசமாக நினைத்து இரத்ததானம் வழங்குதல் வேண்டும். நாம் கொடுக்கின்ற இரத்தத்தின் மூலமாக யார் யார் பிரயோசனமடைகின்றனர் என்பதைப் பார்க்கும் போது,,,,,
1- பிள்ளைப் பேறு மற்றும் அதன்மூலம் ஏற்படும் பிரச்சினைகள்.
APH, PPH, Ectopic pregnancy
2- குருதிச்சோகையுடைய பிள்ளைகள்.
Eg. Malaria, Malnutrition.
3- விபத்துக்களின் மூலம் ஏற்படும் இரத்த இழப்பு.
4- சத்திர சிகிச்சை மற்றும் புற்று நோயாளிகளுக்கு.
மேலும், Thalassemia போன்ற நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக குருதி வழங்குவதன் மூலம் அவர்களின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படுகிறது.
         பெறப்பட்ட குருதியை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பாதுகாக்க முடியும். ஆகவே தொடர்ச்சியான இரத்ததானம் வழங்குவதினூடாகவும், இரத்ததான முகாம்களை நடத்துவதன்  மூலமாகவுமே இதனை ஈடுசெய்ய முடியும். மேலே குறிப்பிட்டவர்களுக்கு உதவி உயரிய நன்மையையும், இறையருளையும் பெறுவோமாக..
         இவ்வகையான சிறப்புகளை மையப்படுத்தியதாக ஒவ்வொரு ஆண்டும் June 14ம் திகதி "உலக இரத்ததான தினம்" அனுஷ்டிக்கப்படுகின்றது. எனவே உதிரம் கொடுப்போம் உயிரைப் பாதுகாக்க உதவுவோம். இன்ஷாஅல்லாஹ்!!!!!
Dr. A.R.M.Nihal
Neuro Trauma and Neuro Surgical Anaesthesia and ICU,
National Hospital of Srilanka, Colombo.
(Manaraian's-1995)

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top