பாரீஸ் தாக்குதல்
உள்நாட்டவரின் தொடர்பு
கண்டுபிடிப்பு
பிரான்ஸ்
தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய
தாக்குதலுக்கு உதவியதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த
ஒருவர் குறித்த
விவரங்கள் தற்போது
தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகளை
வெளியிட்டுள்ளது.
பாரீஸில்
வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதலில் 129 பேர்
பலியாயினர். 350 க்கு மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
கால்பந்து
மைதானம், இசை
நிகழ்ச்சி நடைபெற்ற
இடம் மற்றும்
காபி விடுதிகளில்
இத்தாக்குதல்கள் நடைபெற்றன.
இசை
அரங்கினுள் நடைபெற்ற தாக்குதலின்போது, தற்கொலை செய்து
கொண்ட மூன்று
தீவிரவாதிகளில்
ஒருவர் பிரான்ஸை
சேர்ந்தவர் என
தற்போது தெரியவந்துள்ளது.
தெற்கு
பிரான்ஸ் பகுதியைச்
சேர்ந்த 29 வயது இளைஞர் ஒமர்
இஸ்மாயில் முஸ்தபாய் (French
citizen Omar Ismail Mostefai) என்பவரே இத்தாக்குதலில் ஈடுபட்டவர் என தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு
குற்ற வழக்குகளில்
தொடர்புடைய அவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் இருந்த
தொடர்புகள் குறித்து எவ்வித தகவலும் இல்லை.
பிரான்ஸ் காவல்துறையினர்
ஒமரின் தந்தை
மற்றும் சகோதரரை
கைது செய்து,
அவரது வீட்டை
தீவிர சோதனை
நடத்தி வருகின்றனர்.
பாரீஸ்
தாக்குதலில் ஈடுபட்ட 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 6 பேர் தற்கொலை செய்து கொண்னடர்.
மேலும் ஒருவர்
காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனிடையே,
தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணுவதற்கு கீரீஸ்,
ஜெர்மனி, பெல்ஜியம்
நாடுகள் பிரான்ஸுக்கு
உதவிகள் அளித்து
வருகின்றன எனவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment