ஈராக், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகள்

பயங்கரவாதத்தால் கடும் பாதிப்பு
பட்டியலில் இலங்கை 42-ஆவது இடத்தில்
சர்வதேச அறிக்கையில் தகவல்


கடந்த ஆண்டில் (2014) ஈராக், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகள் பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச அமைதி மற்றும் பொருளாதார ஆய்வு நிறுவனம், உலகில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 உலகில் நடைபெற்றுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதியை ஐஎஸ் மற்றும் போகோ ஹராம் இயக்கத்தினர்தான் நடத்தியுள்ளனர். 2014-ஆம் ஆண்டு பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 162 நாடுகளின் பட்டியலில் இலங்கை 42-ஆவது இடத்தில் உள்ளது..
பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ராக், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் 4-ஆவது இடத்திலும், சிரியா 5-ஆவது இடத்திலும் உள்ளது. 6-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
 மன், சோமாலியா, லிபியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் முறையே 7 முதல் 10 வரையுள்ள இடங்களில் உள்ளன. அமெரிக்கா 35-ஆவது இடத்திலும் உள்ளது.

கடந்த ஆண்டில் உலகில் அதிகம் பேரை பலி வாங்கிய பயங்கரவாத அமைப்பாக போகோ ஹராம் உருவெடுத்துள்ளது. அந்த பயங்கரவாதிகள் 6,644 பேரைக் கொன்றுள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் ஐஎஸ் இயக்கம் உள்ளது. அவர்கள் 6,073 உயிர்களை பலி வாங்கியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top