மாலி விடுதியில் பிணைக் கைதிகள்
அந்நாட்டு அமைச்சர்
தகவல்
மாலியின்
தலைநகர் பமாகோவில்
உள்ள தங்கும்
விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம
நபர்கள், பிணைக்
கைதிகளாக பிடித்து
வைத்திருந்தவர்களில் 3 பேரை சுட்டுக்
கொன்றதாக அந்நாட்டு
அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தங்கும்
விடுதியின் கீழ் தளங்களில் இருந்த பிணைக்
கைதிகள் பலரை,
அந்நாட்டு பாதுகாப்புப்
படை பத்திரமாக
மீட்டத்கவும் அவர் கூறியுள்ளார்.
பமாகோவில்
உள்ள ராடிசன்
தங்கும் விடுதிக்குள்
அதிரடியாக நுழைந்த
ஆயுதம் ஏந்திய
மர்ம நபர்கள்,
பிணைக் கைதிகளை
பிடிக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த
நிலையில், விடுதியில்
இருந்த 30 ஊழியர்கள்,
விடுதியில் தங்கியிருந்த 140 பேர் என 170
பேரை பிணைக்
கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டதாக
செய்திகள் வெளியாகின.
ஜிஹாதி
அமைப்பைச் சேர்ந்த
மர்ம நபர்கள்
இந்த தாக்குதலில்
ஈடுபட்டிருக்கலாம் என்றும், அவர்கள்
தானியங்கி ஆயுதங்களைக்
கொண்டு தாக்குதல்
நடத்தியிருக்கலாம் என்று வெடி
சப்தங்களைக் கொண்டு கணிக்கப்பட்டிருப்பதாகவும்
பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியை
அந்நாட்டு காவல்துறையும்,
இராணுவமும்
சுற்றி வளைத்துள்ளது.
விடுதியின் அமைப்பு உள்ளிட்டவற்றை இராணுவத்தினர்
ஆராய்ந்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment