கண்டி நகரம் அபிவிருத்தி காண்பது போன்று

கல்முனை நகரமும் கிழக்கு மாகாணத்திலுள்ள

பிரதேசங்களும் அபிவிருத்தி காண வேண்டும்.

வெளிநாட்டு நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள கண்டி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று 26 ஆம் திகதி வியாழக்கிழமை iஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது.
இது போன்று கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் எப்போது நடைபெறும்? கல்முனையிலுள்ள வீதிகள் எப்போது சீராகும்? கல்முனை பொதுச் சந்தை நவீன மடையுமா?சாய்ந்தமருது தோணா வேலைத்திட்டம் தேர்தலுக்கு முன் கூறியபடி நிறைவேறுமா? கிழக்கு மாகாணத்திலுள்ள மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா? என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நம்பி பொதுத் தேர்தலில் வாக்களித்த கிழக்குப் பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரத்திலிருந்த பல பிரதேசங்கள் மஹிந்த ஆட்சி காலத்தில் அபிவிருத்தி அடையவில்லை. இந்த நல்லாட்சியிலாவது இப்பிரதேசங்கள் அபிவிருத்தி அடையவேண்டும் குறிப்பாக கல்முனையிலுள்ள வீதிகள் செப்பனிடப்படல் வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் முஸ்லிம் காங்கிரஸை நம்பி ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிக எண்ணிக்கையாக வாக்களித்த மக்கள் காத்திருக்கிறார்கள்.
கண்டி நகரம் அபிவிருத்தி காண்பது போன்று கல்முனை நகரமும் அம்பாறை, திருக்கோணமலை, மட்டக்களப்பு ஆகிய கிழக்கு மாகாணத்திலுள்ள மாவட்டங்களிலுள்ள பிரதேசங்களும் அபிவிருத்தி காண வேண்டும். இந்த நல்லாட்சியில் அம்பாறை, திருக்கோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் மீனவர்களினதும், விவசாயிகளினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படல் வேண்டும். இம்மாவட்டங்களிலுள்ள இளைஞர்கள் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைப்பதற்கு இப்பிரதேசங்களின் மக்கள் பிரதிநிதிகளும் கண்டி நகர அபிவிருத்தித் திட்டம் போன்று அமைச்சர்களை வரவழைத்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு அரசாங்கத்திற்கு திட்டங்களை முன் வைக்க வேண்டும் என கட்சியை நம்பி வாக்களித்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.











1 comments:

  1. Digamadulla district gave 3mps what are they doing only they were keen to get deputy minister always SLMC leader and his MPs during election they will give promises after get elected they forget every thing you can see Rizard gave 3chaimans to Digamadulla district how higher post given to SLMC supporters from leaders ministry still they are making us fool for vote east Muslim for post out of east I think leader can't find educated person among eastern voters

    ReplyDelete

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top