வாழ்விடங்களை இழந்த முஸ்லிம்களுக்கான
நுரைச்சோலை வீட்டுத்
திட்டத்தின் அவலநிலை பாரீர்
அம்பாறை
மாவட்டத்தில் சுனாமியால் வாழ்விடங்களை இழந்த முஸ்லிம்
மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான், நுரைச்சோலை
வீட்டுத் திட்டம்.
சவூதி அரேபியாவின்
‘நன்கொடை நிதியம்’
இதற்காக, இலங்கை
நாணயப் பெறுமதியில்
சுமார் 552 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியது.
கிட்டத்தட்ட
40 ஏக்கர் காணியில்
500 வீடுகள், வைத்தியசாலை, சந்தைக் கட்டடத் தொகுதி, ஆண் – பெண்
பாடசாலைகள், விளையாட்டு மைதானம், பள்ளிவாசல் மற்றும்
பஸ் தரிப்பிடங்கள்
என்று, அனைத்தும்
உள்ளடங்கிய ஒரு ‘குட்டி நகரம்’தான் நுரைச்சோலை வீட்டுத் திட்டம்
இன்று
அந்த குட்டி
நகரம் காடு
பிடித்து, சேதமடைந்து,
விலங்குகளின் உறைவிடமாக மாறியிருக்கிறது நுரைச்சோலை வீட்டுத்
திட்டம். இங்குள்ள
கட்டிடங்களில் இருந்த பெறுமதியான பொருட்கள் கூட களவாடப்பட்டுள்ளன.
அம்பாறை
மாவட்டத்தில் அபிவிருத்தி குழுத் தலைவராக பாராளுமன்ற
உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர்
நியமிக்கபட்டுள்ளார். இப்போது,
முஸ்லிம் நாடாளுமன்ற
உறுப்பினர்களென்று, முஸ்லிம் காங்கிரஸைச்
சேர்ந்த மூவர்
மட்டுமே இம்மாவட்டத்தில் உள்ளனர். முஸ்லிம்
காங்கிரஸ் இப்போது
ஆளுந்தரப்பில்தான் உள்ளது. அதுமாத்திரமல்லாமல், அம்பாறை
மாவட்ட முஸ்லிம்
மக்களின் பெரும்பான்மை
ஆதரவினைப் பெற்ற
கட்சியாகவும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது.
0 comments:
Post a Comment