முஸ்லிம் மக்களின்
மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு
யாழ்.அரச அதிபர் பிரதேச
செயலாளர்களுக்கு பணிப்புரை
யாழ். மாவட்டத்தில் முஸ்ஸிம் மக்களின் மீள்குடியேற்றத்தை
துரிதப்படுத்துமாறு யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வேலணை ஆகிய பிரதேச செயலாளர்களுக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்
வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ். மாவட்டத்தின் முஸ்ஸிம் மக்களின் மீள்குடியேற்றம்
தொடர்பான உயர்மட்ட கலந்தரையாடல் நேற்று
யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட
அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.
மீள்குடியேற்றங்களின் தற்போதைய நிலைமைகள், புதிதாக வரவிருக்கும் முஸ்ஸிம் மக்களின்
மீள்குடியேற்றம், அவர்களுக்கான
நடமாடும் சேவைகள், அடிப்படைத்
தேவைகள், வீடமைப்புத்திட்டங்கள்,
சமூர்த்தித்திட்டங்கள்,
போன்ற பல்வேறு விடயங்கள்
மற்றும் தற்போது மீள்குடியேறியுள்ள மக்களுக்கான தேவைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்ட்தாக
அறிவிக்கப்படுகின்றது
இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ந.செந்தில் நந்தனன்,
திட்டமிடல் பணிப்பாளர்
மோகனேஸ்வரன்,வடமாகாண சபையின்
உறுப்பினர் ஆயூப் அஸ்மின், மற்றும் யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள்,உயர் அதிகாரிகள்,யாழ் மாவட்ட முஸ்ஸிம் பிரதிநிதிகள்,மற்றும் அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment