பிரதி அமைச்சர்
ஹரீஸின் இணைப்புச் செயலாளராக
ஜெலீல் நியமனம்
விளையாட்டுத்துறை
பிரதி அமைச்சர்
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின்
இணைப்புச் செயலாளராக
சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.ஜெலீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்
சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் வித்தியாலயம், கல்முனை
ஸாஹிறா தேசிய பாடசாலை
ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
தனது
உயர்கல்வியை லண்டன் ஹரோ பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வணிக நிருவாகத்துறையில் பட்டம் பெற்றதுடன் லண்டனிலுள்ள பிரபல
தனியார் நிறுவனமொன்றில்
10 வருடங்களாக முகாமையாளராக கடமையாற்றியவர்.
சமூக
சேவைகளில் ஆர்வம்
கொண்ட இவர்
பல மக்கள்
நலத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளதுடன்; சாய்ந்தமருது
வர்த்தக சங்கத்தின்
நிர்வாக உறுப்பினராகவும்
செயற்பட்டவர்.
இவர்
ஏ.ஆதம்பாவா,
அவ்வா உம்மா
தம்பதிகளின் இளைய புதல்வருமாவார்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.