கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை

நுழைவுச் சீட்டுக்களை அதிபர்கள் வைத்திருக்க முடியாது

பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு

பாடசாலை பரீட்சார்த்திகளின் நுழைவுச்சீட்டுக்கள் பாடசாலை அதிபர்களுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் நுழைவுச்சீட்டுக்கள் தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நுழைவுச்சீட்டுக்களை அதிபர்கள் வைத்திருக்க முடியாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
சாதாரண தரப் பரீட்சைக்காக பாடசாலைகளின் ஊடாக தோற்றும் மாணவ மாணவியருக்கான பரீட்சை நுழைவுச் சீட்டுக்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தபால் ஊடாக நுழைவுச்சீட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நுழைவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் உடனடியாக அவற்றை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் அதிபர்கள் நுழைவுச் சீட்டுக்களை வைத்திருக்க முடியாது.
நுழைவுச்சீட்டுக்களை அதிபர்கள் வைத்துக் கொள்வதனால் மாணவர்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கினால் அதன் முழுப் பொறுப்பினையும் அதிபர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் பிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.

இம்முறை மொத்தமாக 664537 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதுடன் இதில் 403442 பேர் பாடசாலை மாணவ மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top