கல்முனை மாரியார் வீதியின் அவல் நிலை பாரீர்!
அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளுக்கு உரோசம் வருவது இல்லையா
எனவும் வாக்களித்த மக்கள் கேள்வி
கல்முனையில் போக்குவரத்துச்
செய்யும் மாரியார் வீதி தற்போது சதுப்பு நிலமாக அதாவது நெற்செய்கைக்கு ஏதுவான நிலமாக மாற்றமடைந்துள்ளது
குறித்து அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில்
நல்லாட்சியில் ஒரு பிரதி
அமைச்சர்
சட்டத்தரணியான மாநகர சபை
முதல்வர்
மாகாண சபை உறுப்பினர்
எல்லாவத்திற்கும் மேலாக இப்பிரதேச மக்களின் அதிக
எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்ற கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்
இவர்கள் இவ்வாறு பதவியில் இருக்கும் நிலையில் கல்முனையிலுள்ள வீதிகளெல்லாம் சேரும் சதுப்பும்மாக மாறிக் கிடப்பதற்கு
காரணம்தான் என்ன? என்ற கேள்வி மக்களால் எழுப்பப்படுகின்றது.
அரசியல் அதிகாரம் இல்லாத தமது அயல் ஊரான சகோதர இனத்தவர்கள் வாழும்
காரைதீவுப் பிரதேசத்திலுள்ள வீதிகளின் சீரான முறைமைகளை கண்டாவது எமது வாக்குகளால்
தெரிவாகி அதிகாரத்திலுள்ளவர்களுக்கு உரோசம் (வெட்கம்) வருவது இல்லையா எனவும் வாக்களித்த
மக்கள் அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர்.
0 comments:
Post a Comment