புரட்சிக்குப் பிறகு முதன் முதலாக
பெண் தூதரை நியமித்த ஈரான்
1979-ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய
புரட்சிக்கு பின் ஈரான் முதன்
முதலாக பெண்
தூதர் ஒருவரை
நியமித்துள்ளது. தற்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்
உள்ள தூதரகத்துக்கு
மெர்சியா அப்கமை
ஈரான் அரசு
தூதராக நியமித்துள்ளது.
ஈரானின் முதல்
பெண் வெளியுறவுத்துறை
செய்தித் தொடர்பாளர்
என்ற பெருமையும்
மெர்சியா அப்கமை
சேரும்.
ஈரானின்
வெளியுறவு துறை
அமைச்சர் ஜாவத்
ஜரிப், இதுவரை
வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளராக இருந்த மெர்சியா
அப்கம் இனி தலைமை வகிப்பார் என்று
நேற்று அறிவித்துள்ளார்.
அப்கமை
தூதராக தேர்ந்தெடுக்க
சில நிமிடங்களே
ஆனதாகவும், அவருக்கு பின் செய்தி தொடர்பாளராக
யாரை நியமிப்பது
என்பதை முடிவு
செய்யவே 4 மாதங்கள்
ஆனதாகவும் கூறியுள்ளார். ஒரு
பெண்ணின் மீது
நம்பிக்கை வைத்து
தைரியமாக இந்த
முடிவை எடுத்ததற்காக
ஜரீப்பை ஊடகங்கள்
பாராட்டி வருகின்றன.
0 comments:
Post a Comment