நடுவானில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து
அசத்திய பிரான்ஸின் முன்னாள் அமைச்சர்

ஆபிரிக்க நாடான காபோன் தலைநகர் லிப்ரெவில் இருந்து பாரிஸ் நகரம் நோக்கி பறந்த விமானத்தில் இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரான்ஸின் முன்னாள் அமைச்சர் பிலிப்பே தூஸ்த் பிளேசி பிரசவம் பார்த்து அசத்தியுள்ளார்.
கபோனின் தலைநகர் லிபர்வில்லில் நடந்த உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் பங்கேற்று, பாரிஸ் நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுபற்றி தெரியவருவதாவது, நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, அதில் பயணித்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் மருத்துவர்கள் யாராவது இருந்தால் பிரசவம் பார்க்க உதவுமாறு அறிவிப்பு வெளியிட்டனர்.
இதனையடுத்து, அந்த விமானத்தில் இருந்த பிரான்ஸின் முன்னாள் அமைச்சர் பிலிப்பே தூஸ்த் பிளேசி தானாக முன்வநது அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். சுக பிரசவத்தில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. விமானம் அல்ஜீரியா வான்வெளியில் பறந்தபோது குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்படுகின்றது.

2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை பிரான்ஸின் வெளிநாட்டு அமைச்சராக இருந்தவர் பிலிப்பே தூஸ்த் பிளேசி. இவர் இதய நோய் மருத்துவராகவும் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top