நல்லிணக்கத்திற்காக ஒலித்த குரல் ஓய்ந்து விட்டது
முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய ஒருங்கிணைப்பாளர் ரஹ்மத் மன்சூர்
இருள்
சூழ்ந்த யுகத்திலிருந்து நாட்டை
மீட்டெடுத்து நல்லிணக்கத்தினை
ஏற்படுத்துவதற்காக குரல்கொடுத்த
மாதுலுவாவே சோபிததேரரின்
மறைவு அதிர்ச்சியையும்
ஆழ்ந்த கவலையையும் தோற்றுவித்துள்ளதாக ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின்
பிரதி தேசிய
ஒருங்கிணைப்பாளர்
ரஹ்மத் மன்சூர் தெரிவித்துள்ளார்.
மாதுலுவாவே சோபித தேரரின் மறைவு குறித்து ரஹ்மத் மன்சூர் வெளியிட்டுள்ள
அனுதாபச்
செய்தியில்
மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அச்செய்திக்குறிப்பில் ரஹ்மத்
மன்சூர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இந்த நாட்டில் ஆட்சியை தக்கவைப்பதற்காக இனவாதத்தின் அடிப்படையில் தேசிய சகோதரத்தவ இனங்களுக்கிடையில் பிரித்தாளும் தந்திரத்தின் அடிப்படையில் காழ்ப்புணர்ச்சிகள் உருவாக்கப்பட்டு விரிசல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
அவ்வாறான நிலையில் கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி இந்த நாட்டில் ஜனநாயகச் சட்டங்களுக்கு மதிப்பளித்து நல்லாட்சி ஏற்படுத்தப்படவேண்டும் என்பதற்காக மூவினங்களின் தலைவர்களையும் ஓரணிக்கு கொண்டுவந்த பெருமை இவரையே சாரும். நாட்டில் காணப்பட்ட இருண்ட யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நல்லாட்சி தோன்றுவதற்கு ஆணிவேராக இருந்தார்.
ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராக அழுத்தமான குரலெழுப்பி வந்தவர்.
இனங்களுக்கிடையில் நிரந்தர ஐக்கியம் ஏற்படுத்தப்பட்டு சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பவேண்டுமென்பதையே இலக்காக கொண்டிருந்தார்.
அச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் அரும்பணிகளை முன்னெடுத்துவந்த பெருமைக்குரியவரை இன்று நாம் இழந்து நிற்கின்றோம். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்காக ஓங்கி ஒலித்த குரல் இன்று ஓய்ந்து விட்டது. அவருடைய சேவைகளும், அர்ப்பணிப்புக்களும் எந்வொரு இலங்கையரின் மனதிலிருந்தும் நின்றகலாதவொன்றாகவே உள்ளன.
அவருடைய மறைவு ஈடுசெய்யமுடியாத இழப்பாகவிருக்கின்றது. அவருடைய கனவுகள் நனவாக்கப்படவேண்டும். அவருடைய இலக்குகளை அடைவதற்காக அனைத்து தலைவர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அதுவே அவருடைய ஆன்மாவின் சாந்திக்காக நாம் செய்யவேண்டிய கடமையாகின்றது. அதனை மனதில் நிலைநிறுத்தி எமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனைவரும் கைகோர்க்கவேண்டிய தருணம் இதுவாகும். இவ்வாறு ரஹ்மத் மன்சூர் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment