சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை சம்பந்தமான நகர்வுகள்

அதிருப்தியடைய செய்கின்றது என்கின்றார்

மு.கா மாவட்ட பொருளாளர் ஏ.சி.யஹியாகான்!


சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை சம்பந்தமான நகர்வுகள் என்னை அதிர்ப்தியடைய செய்கின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பொருளாளரும் நிதி மற்றும் கணக்காளர்க்கான பணிப்பாளருமான .சி.யஹியாகான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.சி.யஹியாகான் இது சம்பந்தமாக  விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
 கடந்த பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட எமது சாய்ந்தமருதிற்கான உள்ளுராட்சி சபையினுடைய தேவை இன்னும் நிவர்த்தி செய்யப்படவில்லை என்று நான் உட்பட சாய்ந்தமருதிலுள்ள சகல மக்களும் அதிர்ப்தியுடன் இருக்கின்றார்கள்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நாட்டின் இரண்டாவது ஆளும் தலைவராக இருக்கின்ற எமது பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முழுக் கல்முனை மக்களும் கலந்துக் கொண்ட மாபெரும் மக்கள் வெள்ளக் கூட்டத்தில்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸினுடைய தலைவரின் வேண்டுகோளை ஏற்று நான் தேர்தல் முடிந்த கையுடன் சாய்ந்தமருது மக்களினுடைய கோரிக்கையை மதித்து உள்ளுராட்சி சபையை கொடுப்பேன்என்று வாக்குறுதியளித்திருந்தார். இதற்கு மேல் எந்த அழுத்தங்களும் தேவைப்படுமென்று நான் நினைக்கவில்லை.
மறைந்த மாமனிதர் அஸ்ரப் அவர்கள் ஒரு இரவோடு சாந்தமருதிற்கான பிரதேச செயலகத்தை நிறுவிக் கொடுத்து சாதித்த சந்தரப்பங்களையும் நினைவூட்ட விரும்புகிறேன்.
எந்த எதிர்ப்பு சக்தி வந்தாலும் எமது கட்சியினுடைய தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் இந்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தே ஆக வேண்டும்.
நீங்கள் பிரதம மந்திரியின் வலது கையாக இருக்கின்ற அமைச்சர் என்ற வகையில் இந்த உள்ளுராட்சி சபையை எதிர்வருகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு முன் அமைத்து தர வேண்டும். அதற்கான சில விட்டுக் கொடுப்புக்களை செய்து சகல கட்சிகளின் ஆதரவுகளை பெற்றுக் கொண்டாவது எமது சபையை பெற்றுத் தர வேண்டும்.
அத்தோடு பிரதம மந்திரி அவர்கள் சாய்ந்தமருது மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஒரு சில தடைகள் ஒரு சிலர் கொடுக்கலாம் அதையெல்லாம் உடைத்தெரிந்து எமது சபையை பெற்றுக் கொள்வதற்கு அணைவரும் தயாராகுங்கள்.

சாய்ந்தமருதிலுள்ள பள்ளிவாசல் உட்பட அணைத்து அரசியல்வாதிகளும் ஒரே குரலில் நிற்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பொருளாளரும் நிதி மற்றும் கணக்காளர்க்கான பணிப்பாளருமான .சி. யஹியாகான் அவர்கள் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top