பாகிஸ்தானின் யூனிஸ்கான்
பாகிஸ்தானின்
நட்சத்திர துடுப்பாட்டக்காரர் யூனிஸ்
கான் ஒருநாள்
கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
அபுதாபில்
இங்கிலாந்து எதிரான முதல் போட்டிக்குப் பின்னர்
அவர் ஓய்வு
முடிவை அறிவித்தார்.
பாகிஸ்தான்
கிரிக்கெட் அணியை இரு வெவ்வேறு காலங்களில்
வழிநடத்திய 37 வயது யூனிஸ்கான், இதவரை 264 ஒருநாள்
போட்டிகளில் பங்கேற்று 7240 ஓட்டங்களை குவித்துள்ளார்.
அவர் 7 சதங்களையும்
48 அரை சதங்களையும்
விளாசியுள்ளார்.
பாகிஸ்தானுக்காக
ஒரு நாள்
போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள்
வரிசையில் 6-வது இடத்தில் யூனிஸ்கான் உள்ளார்.
டெஸ்ட்போட்டியை
பொறுத்தவரையில் கடந்த மாதம் இங்கிலாந்து அணிக்கு
எதிரான போட்டியின்
போது, ஜாவித்
மியான்தத்தை விட அதிக ஓட்டங்கள் குவித்து முதலிடம்
பெற்றார்.
ஒய்வு
குறித்து கருத்து
தெரிவித்த யூனிஸ்கான்,
கடந்த 15 ஆண்டுகளாக
ஒரு நாள்
கிரிக்கெட் போட்டிகளில் தன்னால் முடிந்த பங்களிப்பை
அளித்துள்ளேன். ஆனால், தற்போது ஓய்வு பெறுவதற்கான
நேரம் வந்துள்ளது.
பாகிஸ்தானின் இளம் வீரர்கள் இனி ஒருநாள்
போட்டிகளில் அணியை முன்னெடுத்து செல்வாரகள் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த
2009 ஆம் ஆண்டு
இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை
பாகிஸ்தானுக்கு பெற்று தந்த யூனிஸ்கான், சில
ஆண்டுகளுக்கு முன்பு டி20 போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
0 comments:
Post a Comment