ஐ. தே. கட்சியின்  முன்னாள் எம்.பிக்களின் சங்கம்

நடாத்திய வருடாந்த கூட்டம்

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரும் கலந்து கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் நடாத்திய வருடாந்த கூட்டம் இன்று 24 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 10.30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள Water Edge Hotel இல் இடம்பெற்றது.
இக்கூட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம்களின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான ஏ.ஆர்.மன்சூர் அவர்களும் ஹேமியோ ஹுருள்ள அவர்களினால் அழைக்கப்பட்டிருந்தார்.
இங்கு பிரதான பேச்சாளராக  அழைக்கப்பட்டிருந்த பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க சமகால அரசியல் நிலை பற்றி சுருக்கமான உரையொன்றை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்தம் அனுபவங்களையும் நாட்டு மக்கள் அனுபவிக்கின்ற கஷ்டங்களைப் பற்றியும் விளக்கமாக  முன்வைத்து உரைகளை நிகழ்த்தினார்கள்.  கூட்டம் மதிய உணவுடன் முடிந்த்து.
மதிய உணவு சாப்பிடும் சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின்  முன்னாள் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் அத்தபத்து, பி தயாரத்ன, அபயக்கோன், ஜோஸப் மைக்கல் பெரேரா,முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் ஆகியோர் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவுடன் அமர்ந்திருப்பதைப் படத்தில் காணலாம்.
இவர்கள் 1970 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிட்த்தக்கது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top