பாடசாலை அனுமதிக்கான
போட்டி
விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும்
– ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன
அரசாங்க
பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கான போட்டியை புதிய
அரசாங்கம் மிக
விரைவில் முடிவுக்குக்
கொண்டுவரும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
தெரிவித்துள்ளார்.
சகல
பாடசாலைகளுக்கும் சமமான வசதிகளையும் சிறப்புரிமைகளையும்
வழங்கி அப்பாடசாலைகளின்
மனித வளங்கள்,
பௌதீக வளங்களை
அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் இதற்காக
அரசாங்கம் தனது
முதலாவது வரவு
செலவுத்திட்டதிலேயே அதிகளவு நிதியை
ஒதுக்கியிருக்கின்றது.
நேற்று 23 ஆம் திகதி திங்கள்கிழமை கொழும்பு
ஸாஹிறாக் கல்லூரியில்
இடம்பெற்ற வருடாந்த
பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து
கொண்டு உரையாற்றும்போதே
ஜனாதிபதி இதனைத்
தெரிவித்தார்.
கல்லூரிக்குச்
வருகை தந்த ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன்
வரவேற்றதோடு, கல்லூரியின் சாரணர் பிரிவினரால் ஜனாதிபதிக்கு
அணிவகுப்பு மரியாதையொன்றும் வழங்கப்பட்டது.
நாட்டிலுள்ள
சகல பாடசாலைகளிலும்
இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி
அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுவது அவசியமானதாகும்
.
நாட்டில்
சகல இனங்களுக்கு
மத்தியிலும் சகோதரத்துவத்தையும் நம்பிக்கையையும்
கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தில் பாடசாலைகளை சிங்களம்,
தமிழ், முஸ்லிம்
பாடசாலைகள் என வேறுபடுத்தி நோக்குவது அவசியமற்றதாகும்
என்றும் ஜனாதிபதி
குறிப்பிட்டார்.
இந்த
நிகழ்வின்போது கல்லூரியில் கடந்த ஆண்டு சிறந்த
திறமைகளை வெளிக்காட்டிய
மாணவர்களுக்கு ஜனாதிபதி பரிசில்களையும் வழங்கிவைத்தார்.
இவ்வைபவத்தில்
அமச்சர்களான அகில விராஜ் காரியவாசம், றிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளஸி, , பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்
அலி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான், கொழும்பு மாநகர சபை மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில்
உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.