சச்சின் டெண்டுல்கரிடம்
முழுப்பெயரை கேட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்
ரசிகர்கள் கொந்தளிப்பு


சச்சின் டெண்டுல்கர் குடும்பத்தினர்களுக்கு இருக்கைகள் மறுக்கப்பட்டது மற்றும் அவரது லக்கேஜை தவறாக வேறு இடத்துக்கு அனுப்பியது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் ஆவேசமாக கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதனை அறிந்துகொண்டுள்ள  சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் சச்சினுக்கு ஆதரவாக  சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட்டுக்காக சச்சின் சென்றுள்ள நிலையில், அவரது குடும்பத்தினரின் பயண நெருக்கடி பற்றி கோபமாக சச்சின் ட்வீட் செய்தார்:
எனது குடும்ப உறுப்பினர்களின் வெய்ட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படவில்லை. இருக்கைகள் இருந்தும் பயணம் உறுதி செய்யப்படவில்லை என்பது குறித்து கடும் கோபமும், விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன். மேலும் லக்கேஜ்களும் தவறான இடத்துக்கு அனுப்பப் பட்டது, அக்கறையின்மையும் பொறுப்பின்மையும் காட்டுகிறதுஎன்று சச்சின் டெண்டுல்கர் கோபாவேசப்பட்டிருந்தார்.
இவரது ட்விட்டர் பதிவுக்கு சில நேரம் கழித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பதில் அளிக்கையில்,
 ‘சாரி சச்சின், உங்கள்து லக்கேஜ் விவரங்களை உங்களது முழு பெயர், முகவரியுடன் அனுப்பினீர்கள் என்றால் நாங்கள் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும்என்று கூறியிருந்தது.
இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் சச்சின் ரசிகர்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸை மன்னிக்க முடியாத நிலையில் கடும் வாசகங்களுடன் விமர்சனம் செய்துள்ளனர்.
அதாவது, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அளித்த அவஸ்தை, லக்கேஜ் விவகாரம் மட்டுமல்லாது சச்சினின் முழுப்பெயரை கேட்டது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பிரிட்டிஷ் ஏர் வேஸ் நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளனர்.

முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா, சச்சின் ரசிகராக தனது ட்விட்டரில், “டியர் பிரிட்டிஷ் ஏர்வேஸ், சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், இந்தியா என்ற பெயரை முயற்சி செய்து பாருங்கள், இங்கு போஸ்டல் சேவை, கூரியர் நிறுவனங்களுக்கு இந்தத் தகவல் போதுமானதுஎன்று சற்றே நையாண்டித் தொனியுடன் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top