சீ.எஸ்.என் தொலைக்காட்சியை ஆரம்பிப்பதற்கு
2,340 லட்சம்
ரூபா எப்படி கிடைத்தது?
தெளிவுப்படுத்தி விட்டு, மகன் யோஷித்தவை காப்பற்றிக்கொள்ளுமாறு
மஹிந்தவுக்கு அனுரகுமார திஸாநாயக்க தெரிவிப்பு!
சீ.எஸ்.என்
தொலைக்காட்சியை ஆரம்பிக்க பயன்படுத்தப்பட்ட 2 ஆயிரத்து 340 லட்சம் ரூபா எப்படி கிடைத்தது
என்பதை தெளிவுப்படுத்தி விட்டு, மகன் யோஷித்தவை காப்பற்றிக்கொள்ளுமாறு மகிந்த ராஜபக்சவிடம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த
2 ஆயிரத்து 340 லட்சம் எப்படி கிடைத்தது என்பதை கூற முடியாது என்றால், அந்த பணம் மஹிந்த
அல்லது யோஷித்தவின் சம்பளத்தில் பெறப்பட்ட பணம் இல்லை என்றால், மெதமுல வளவில் கிடைத்த
வருமானத்தில் வந்ததில்லை என்றால், கட்டாயம் அது, திறைசேரியின் பணமாகவே இருக்கும்.
பணச்சலவை
சட்டத்தின் கீழ் பொதுமக்களின் பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த விசாரணையுடன்
மேலும் பல விசாரணைகள் பிணையப்பட்டுள்ளன.
கால்டன்
தொலைக்காட்சிக்கு சொந்தமான கட்டிடத்திற்கும், அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஜனாதிபதி
செயலகத்தில் இருந்து பணம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன்
சீ.எஸ்.என் தொலைக்காட்சிக்கு அரசுக்கு சொந்தமான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும்
அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment