முஸ்லிம்களுக்கு எதிரான

அரசியல் பேச்சுக்கள் மன்னிக்க முடியாதது:

மசூதியில் உரை நிகழ்த்தும்போது ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் முதன் முறையாக முஸ்லிம்களின் தொழுகைக்குரிய இடமான மசூதிக்கு ஜனாதிபதி ஒபாமா சென்றுள்ளார்.
அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அமெரிக்க முஸ்லிம்கள் தாங்கள் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்து வருவதாக கூறும் வேளையில் ஒபாமாவின் இந்த மசூதி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்நாட்டில் கருதப்படுகிறது.
பால்டிமோர் பகுதியில் பகுதியில் உள்ள மசூதிக்கு சென்ற அவர் அங்குள்ள முஸ்லிம் சமுதாயத்தினரிடையே உரையாற்றினார். அப்போது அரசியல் காரணங்களுக்கான முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவது மிகவும் மன்னிக்க முடியாதது என்று கூறினார்.
ஜனாதிபதி ஒபாமா தமது உரையில் பேசியதாவது:-
தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு சிறந்த வழி என்பதே, அமெரிக்கா இஸ்லாமியர்களை ஒடுக்கவில்லை என்பதை காட்டுவதுதான். மேலும் அது குறித்து வரும் அவதூறுகளுக்கு மறுப்பு தெரிவிப்பது தான்.
அமெரிக்கா முழுவதும் முஸ்லிம் சமுதாயத்தினர் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். இது கவலை தரக்கூடிய நேரம் மட்டுமல்லாமல் அச்சம் கொல்வதற்கான நேரமும் இதுதான். எல்லா அமெரிக்கர்களும் தீவிரவாதம் குறித்து கவலை கொள்கிறீர்கள். அதற்கும் மேலாக அமெரிக்க முஸ்லிம்களான உங்களுக்கு மேலும் ஒரு கவலை உள்ளது. உங்களது ஒட்டுமொத்த சமுதாயமும் அடிக்கடி சில வன்முறை தாக்குதலுக்காக அடிக்கடி தூற்றப்படுகிறது.
ஒருவர் மீதான நம்பிக்கையின் மீது தாக்குதல் தொடுப்பது, அமெரிக்காவில் வாழும் சீக்கியர் உள்ளிட்ட மற்ற சமுதாயத்தினர் மீதான நம்பிக்கையில் சிக்கலை ஏற்படுத்தும்.
நம்முடைய மத சுதந்திரத்திற்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். தீவிரவாதத்தில் இருந்து நம்முடைய நாட்டை பாதுகாக்கும் பொருட்டு, தீவிரவாத பிரச்சாரங்களில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களின்போது ஒபாமா பல்வேறு மசூதிகளுக்குச் சென்றிருந்தாலும், தனது பதவிக் காலத்தில் அமெரிக்காவிலுள்ள மசூதிக்கு அவர் சென்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top