40 ஆயிரம் ரூபாவிற்கு குறைந்த சம்பளம்
பொறும்
தனியார்
துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு
40
ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த சம்பளம் பெற்றுக் கொள்ளும் தனியார்துறை ஊழியர்களுக்கு
2500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
தனியார்துறை
ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு வழங்கும் உத்தேச சட்ட மூலம் நேற்று நாடாளுமன்றில்
சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த
உத்தேச சட்ட மூலத்திற்கு அமைய 2015ம் ஆண்டில் 1500 ரூபாவும், 2016ம் ஆண்டில் எஞ்சிய
1000 ரூபாவும் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த
கொடுப்பனவு பெருந்தோட்டத்துறைசார் ஊழியர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு
கொடுப்பனவு வழங்கத் தவறும் தனியார்துறை நிறுவன உரிமையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம்
அல்லது ஆறுமாத கால சிறைத்தண்டனை அல்லது இந்த இரண்டு தண்டனைகளையும் விதிக்கப்பட முடியும்
என தெரிவித்துள்ளார்.
தனியார்துறையின்
குறைந்தபட்ச சம்பளமாக 10ஆயிரம் ரூபாவினை நிர்ணயிக்கும் உத்தேச சட்ட மூலமொன்றும் நாடாளுமன்றில்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment