வன்முறையை தூண்டும் வார்த்தைகள் எதில் அதிகம்

பைபிளில் உள்ளதா? குர் ஆனில் உள்ளதா?

ஆய்வில் வெளியான தகவல்கள்




புனித குர்ஆனை விட புனித பைபிளில் தான் வன்முறையை தூண்டும் வார்த்தைகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக அதிர்ச்சி ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளவில் நிகழ்ந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு இஸ்லாமியர்களே காரணம் என்றும், அவர்கள் பின்பற்றும் புனித குர்ஆனும் வன்முறையை தான் போதிக்கிறது என உலகம் முழுவதும் விவாதங்கள் நடைபெற்று வருகிறன.
இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் டாம் ஆண்டர்சன் என்ற மின்பொருள் பொறியாளர் ஒரு வியக்கத்தக்க ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அதாவது, மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, கோபம், அருவருப்பு, வருத்தம், ஆச்சரியம், பயம்/கவலை மற்றும் நம்பிக்கை ஆகிய 8 மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகள்/போதனைகள் குர்ஆனில் உள்ளதா? அல்லது, பைபிளில் உள்ளதா என ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதற்கு புதிய மற்றும் பழைய ஏற்பாடு பைபிள்களும், 1957ம் ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட குர்ஆன் ஆகிய மூன்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார்.
இந்த ஆய்வை விரைவாக மேற்கொள்ள Odin Text என்ற நவீன மின்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மூன்றையும் வெறும் 2 நிமிடங்களில் ஆய்வு செய்து முடித்துள்ளார்.
இந்த ஆய்வின் முடிவில், ’கொல்லுதல், அழித்தல் உள்ளிட்ட வன்முறைக்கு தூண்டும் வார்த்தைகள் அதிகளவில், அதாவது 5.3 சதவிகிதம் பழைய ஏற்பாட்டு பைபிளில் இடம்பெற்றுள்ளதை அவர் கண்டு பிடித்துள்ளார்.

இதே ஆய்வில் புதிய ஏற்பாட்டு பைபிளில் 2.8 சதவிகித வன்முறை வார்த்தைகள் அடங்கியுள்ளன. ஆனால், புனித குர்ஆனில் 2.1 சதவிகித வன்முறை வார்த்தைகள் மட்டுமே அடங்கியுள்ளதாக டாம் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top