தாய்வானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:
ஆகக்குறைந்தது
7 பேர் உயிரிழப்பு
தாய்வான்
யூஜிங் பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் இன்று
அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதியில் காணப்படும் இரண்டு அடுக்குமாடி
குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. அக்குடியிருப்பில் இருந்த 221 பேரை மீட்புக் குழுவினர்
இதுவரை மீட்டுள்ளனர்.
இவர்களில்
115 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்க அதிர்ச்சியில் இருவருக்கு
மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
மேலும்,
தாய்வான் நகரின் வெய் குவன் உயர் அடுக்கு மாடி கட்டிடங்கள்தான் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக
தகவல்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தால்
மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தைனான் நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் மீட்புப் பணிகள்
துரிதமாக நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு
குழந்தை உட்பட ஆகக் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், கட்டிடங்கள் மிக
மோசமாக சேதமடைந்திருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
யூஜிங்
நகரின் தென்கிழக்கே 36 கி.மீ தொலைவில் உள்ள இடத்தில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில்
நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment