ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இந்திய வெளிவிவகார் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு


இலங்கை - இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று 6 ஆம் திகதி ஜனாதிபதி இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பில், இரு நாட்டு தலைவர்களும், இலங்கை - இந்தியா இடையே செயல்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும், நேற்று நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டம் குறித்தும் கலந்தாலோசனை செய்தனர்.

இந்தியாவால், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் திருப்தியளிப்பதாக ஜனாதிபதி பாராட்டியதோடு, அதற்காக தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top