சாவகச்சேரியில்
70 தங்க பிஸ்கட்டுக்களுடன்
கைது செய்யப்பட்ட பெண்ணிற்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்
யாழ்ப்பாணம்.சாவகச்சேரி
பகுதியில் மூன்று கோடியே 93 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத தங்க பிஸ்கட்டுக்களுடன் நேற்று
கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
சந்தேகநபரான
பெண்ணை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 8 ஆம் திகதி
வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.பிராந்திய
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபரான பெண் நேற்று
அதிகாலை கைது செய்யப்பட்டார்.
சாவகச்சேரி
சங்கத்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஏழு கிலோகிராம் பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுக்களுடன்
இப்பெண் கைது செய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment