நான் பொலிஸ் மா அதிபராக இருந்திருந்தால்,
விமல் வீரவன்ஸ
உள்ளே இருந்திருப்பார்.
யோஷித்தவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல:
ம. வி. முன்னணியின் தலைவர் அனுரகுமார
தெரிவிப்பு
விமல்
வீரவன்ஸ, போலி கடவுச்சீட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவ்வாறான சம்பவத்துடன்
தொடர்புடைய நபர் என சந்தேகித்தால், குறைந்தது இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கலாம்.
மஹிந்த ராஜபக்ஸ, ரணில் மற்றும் மைத்திரியுடன் பேசி, வீரவன்ஸவை விடுவித்து கொண்டார்.
அது மாத்திரமல்ல புதிய கடவுச்சீட்டை செய்து கொடுத்தனர். இதனால், அரசாங்கம் மோசடியில்
ஈடுபட்டவர்களை பாதுகாத்து வருவது உறுதியாகியுள்ளது. நான் பொலிஸ் மா அதிபராக இருந்தால், விமல் வீரவன்ஸ
உள்ளே இருந்திருப்பார். அவர், வீடமைப்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மக்கள் பணத்தை
பயன்படுத்தி ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெறுமதியான 6 வீடுகளை கட்டினார். என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க
தெரிவித்துள்ளார்.
.பத்தரமுல்லையில்
உள்ள அந்த முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்
இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி
மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல்
அல்ல கடந்த காலத்தில் பொது சொத்துக்களை கொள்ளையிட்டவர்களும், எதிர்காலத்தில் கொள்ளையிட
எதிர்பார்க்கும் தரப்பினரே, அரச பணத்தை முறைகேடாக பயன்படுத்தி நபர்களை கைது செய்யும்
போது அதனை அரசியல் பழிவாங்கல் என்கின்றனர்.
இந்த
மோசடியாளர்களின் கொள்ளையிட்ட சொத்துக்கள் மஹிந்த ராஜபக்ஸவின் காணியொன்றை திருட்டு
காணி பத்திரத்தை பயன்படுத்தி ஷமல் ராஜபக்ஸ தனதாக்கி கொண்டது போன்ற பிரச்சினையல்ல இது.
ஒரு
குடும்பம் அல்லது சில நபர்களுக்கும் இடையிலான பிரச்சினையல்ல. இந்த மோசடியாளர் பொதுமக்களின்
சொத்துக்களை கொள்ளையிட்டனர், அவற்றை சுரண்டி சாப்பிட்டு, விரயப்படுத்தினர்.
விமல்
வீரவன்ஸ, போலி கடவுச்சீட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவ்வாறான சம்பவத்துடன்
தொடர்புடைய நபர் என சந்தேகித்தால், குறைந்தது இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கலாம்.
மஹிந்த
ராஜபக்ஸ, ரணில் மற்றும் மைத்திரியுடன் பேசி, வீரவன்ஸவை விடுவித்து கொண்டார். அது மாத்திரமல்ல
புதிய கடவுச்சீட்டை செய்து கொடுத்தனர். இதனால், அரசாங்கம் மோசடியில் ஈடுபட்டவர்களை
பாதுகாத்து வருவது உறுதியாகியுள்ளது.
நான்
பொலிஸ் மா அதிபராக இருந்தால், விமல் வீரவன்ஸ உள்ளே இருந்திருப்பார். அவர், வீடமைப்பு
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மக்கள் பணத்தை பயன்படுத்தி ஒரு கோடியே 10 லட்சம் ரூபா
பெறுமதியான 6 வீடுகளை கட்டினார்.
இதில்
ஒரு வீடு ஷிரந்தி ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி பணிக்குழுவில் பணியாற்றிய
ஒருவருக்கு வழங்கப்பட்டது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment