எமது வடக்கு,
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் காணாமல் போனார்.
அவரது
தாயார் இன்னமும் அவர் உயிரோடு இருக்கின்றார்
என்ற நம்பிக்கையுடனேயே வாழ்ந்து
வருகின்றார்.
-அமைச்சர் ரவூப் ஹக்கீம்
வடக்கு,
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் காணாமல் போனார். ஆனால் அவருக்கு என்ன நடந்தது
என்று இன்றும் தெரியாது. இந் நிலையில் அவரது தாயார் இன்னமும் அவர் உயிரோடு இருக்கின்றார்
என்ற நம்பிக்கையுடனேயே வாழ்ந்து வருகின்றார். என
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில்
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் காணாமல்போனோருக்கு மரணச்
சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாக புத்திக பத்திரண எம்.பி. முன்வைத்த தனிநபர்
பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.
அவர்
மேலும் தெரிவிக்கையில்,
கடத்தப்பட்டவர்கள்
தொடர்பான குற்றம், தண்டனைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டு அக் குற்றத்திற்கு தண்டனை
வழங்கப்பட வேண்டும். பலவந்தமாக கடத்தல் தொடர்பான குற்றத்தை எமது தண்டனை மட்டத்தில்
கொண்டு வரவேண்டும். காணாமல் போனவர்கள் என்ற விடயத்தில் தமிழர்கள்
அதிகளவு பாதிக்கப்பட்டதோடு, முஸ்லிம்களும் இதனால் பாதிப்புகளை சந்தித்தார்கள்.
காணாமல் போனவர்களில் சிங்களச் சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள்
என்ற சான்றிதழ் வழங்கும் விடயத்தில் ஐ.நா சட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
எமது
வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் காணாமல் போனார். ஆனால் அவருக்கு என்ன
நடந்தது என்று இன்றும் தெரியாது. இந் நிலையில் அவரது தாயார் இன்னமும் அவர் உயிரோடு
இருக்கின்றார் என்ற நம்பிக்கையுடனேயே வாழ்ந்து வருகின்றார்.
எனவே,
பலவந்தமாக கடத்தல் தொடர்பான குற்றத்தை எமது தண்டனை மட்டத்தில் கொண்டு வரவேண்டும்.
அத்தோடு பரணகம ஆணைக்குழு உட்பட பல ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளுக்கமைய கடத்தலை
தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment