தேசிய கொடியில்
தமிழ், முஸ்லிம் மக்களை
எச்சரிக்கை செய்யும் வாள் ஏந்தியுள்ள சிங்கத்தை நீக்கவும்!
தேசிய
கொடியிலுள்ள வாள் ஏந்தியுள்ள சிங்கத்தை அகற்றிவிட்டு சகல மக்களிடையேயும் சகோதரத்துவத்தை
வெளிக்காட்டும் சின்னமொன்றை தேசியக் கொடியில் சேர்க்குமாறு மக்களால்
பிரேரணைகள் முன்வைக்கப்படுகின்றது.
உத்தேச
அரசியல் யாப்பு சீர்திருத்த யோசனைக்கு மக்கள் கருத்தாக இந்தப் பிரேரணை முன்வைக்கப்படுகின்றது.
தேசிய
கொடியிலுள்ள வாள் ஏந்தியுள்ள சிங்கம் இந்நாட்டிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களை எச்சரிக்கை
செய்யும் விதமாகக் காட்டப்படுவதாக தமிழ், முஸ்லிம் மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதாவது
தேசியக் கொடியிலுள்ள தமிழ் மொழி பேசும் மக்களைக் குறிக்கும் வர்ணங்களை நோக்கி வாளேந்திய
சிங்கம் எச்சரிக்கை செய்வதாகவே அந்தச் சின்னம் காட்டப்படுவதாக சிறுபாண்மை இனத்திலுள்ள
புத்திஜீவிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
முஸ்லிம்
காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் கூட சுமார் 20 வருடங்களுக்கு முன் அட்டாளைச்சேனை கல்விக்
கல்லூரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரை நிகழ்த்தும் போது இக்கருத்தைச் சுட்டிக்காட்டியதும்
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment