வெளிநாட்டு வேலவாய்ப்பு பணியகத்தின்
கல்முனை
பயிற்சி நிலைய முன் கதவு
இனம்தெரியாத சிலரால் பூட்டிடப்பட்டு
மூடப்பட்டிருப்பதாக அறிவிப்பு!
மூடப்பட்டிருப்பதாக அறிவிப்பு!
கல்முனையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பயிற்சி நிலையத்தில்
இருந்த பொருட்களை ஏற்றிச் செல்ல வந்த லாரியை தடுத்து லாரியையும் உள்ளே வைத்து இனம்
தெரியாத சிலரால் பணியக பயிற்சி நிலையத்தின்
முன் கதவு (இன்று 10 ஆம் திகதி) பூட்டு இட்டு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இதோ
பிரதி அமைச்சர் பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஐ, எம், மன்சூர் ஆகியோர்களின்
அறிக்கைகள்.
கல்முனையில்
அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை இடமாற்ற எடுக்கும் நடவடிக்கையினை தடுப்பதற்குரியது
சந்திப்பு (இன்று) பாராளுமன்றத்தில் உள்ள அமைச்சர் திருமதி தலதா அதுகொரல அவர்களது
அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்றது.
இக்
கலந்துரையாடல் பற்றி கருத்து தெரிவித்த சுகாதர பிரதி அமைச்சர் பைசால் காசிம் ...
"கடந்த
வாரம் அமைச்சர் திருமதி தலதா அதுகொரல அவர்களுடன் இவ் விடயம் பற்றி பேசியதை தொடர்ந்து
அவர் இன்று இவ் விடயம் பற்றி தீர்க்கமான முடிவு ஒன்றினை பெருவதவற்கு சந்திக்குமாறு
கூறினார். இதனை தொடர்ந்து இன்று விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஹரீஸ், பாராளுமன்ற
உறுப்பினர் மன்சூர் ஆகியோருடன் இன்று சந்தித்தோம், அவர் இவ் இடமாற்றம் இடம் பெறாது
என உறுதிகூறியுள்ளதுடன். தற்போது இயங்கி வரும் கட்டிடத்தினை மாற்றி கல்முனையில் வேறு
ஒரு கட்டிடத்தில் இவ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எதிர்வரும் காலங்களில் இயங்கும்
எனவும் கூறினார். எனவே இவ் விடயம் பற்றி மக்கள் அச்சமடைய தேவையில்லை இவ் வெளிநாட்டு
வேலைவாய்ப்பு பணியகம் கல்முனையில் பிரதேசத்தில் தொடர்ந்து இயங்கவுள்ளது "
கல்முனையிலிருந்து
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மூடப்பட மாட்டாது.
கௌரவ
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் உறுதிபட தெரிவிப்பு ..
ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பிரதி
அமைச்சர்கள் பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஐ.எம்.மன்சூர்,
எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் இன்று பாராளுமன்ற கட்டிட தொகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
அமைச்சர் தலதா அத்துகோரளையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விணக்கப்பாடு ஏற்பட்டதாக
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
இதன்போது
கருத்து தெரிவித்த அமைச்சர் தலதா அத்துகோரளை "போதிய இடவசதி இன்மை காரணமாகவே
கல்முனையிலிருந்து குறித்த பணியகத்தை இடமாற்ற தீர்மானித்ததாக" கூறினார்.
இதற்கு
பதிலளித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்
"கல்முனை கரையோரப் பிரதேசத்தில் போதுமான இடவசதியுடன் கூடிய இடத்தை தான் பெற்றுத்தருவதாக"
உறுதிமொழி வழங்கியதை தொடர்ந்து கல்முனையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
இடமாற்றுவது தொடர்பான திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment